விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வங்கம் மலி பௌவம்அது மா முகடின் உச்சி புக*  மிக்க பெருநீர்* 
    அங்கம் அழியார் அவனது ஆணை*  தலை சூடும் அடியார் அறிதியேல்*
    பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி*  எங்கும் உளதால்* 
    நங்கள் பெருமான் உறையும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவனது ஆணை - அப்பெருமானுடைய திருவாணையை
தலை சூடும் அடியார் - சிரஸா வஹிக்கின்ற பக்தர்கள்,
வங்கம் மலி பௌவம் அது - மரக்கலங்கள் நிறைந்த ஸமுத்ரமானது
மா முகடின் உச்சி புக - உயர்ந்துள்ள அண்ட பித்தியினுடைய தலையளவுஞ் சென்று வியாபிக்கும்படி
மிக்க - பொங்கிக்கிளர்ந்த

விளக்க உரை

பகவத்கீதையில் (14-2)1. இதம் ஜ்ஞாநமுபாச்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா;, ஸர்கேபி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்ய்தந்தி ச” என்றாற்போலே அருளிச்செய்வன முன்னடிகள். நெஞ்சமே! எம்பெருமானுடைய ஆஜ்ஞையாகிய வேதம் முதலிய சாஸ்த்ரங்களைச் சிறமேற்கொண்டு அவற்றின்படியே நடக்குமவர்கள் ஒருகாலும் கெடுதலடைமாட்டார்கள்; ஊழிப்பெரு வெள்ளத்திலும் (மார்க்கண்டேயனைப்போலே) அழியாதிருப்பவர்கள் என்பது உனக்குத் தெரியுமாயின் நீயும் இவர்களைப்போலேயாக விரும்பி நந்திபுரவிண்ணகரத்தை நண்ணுவாயாக என்கிறார். பிரளயகாலத்தில் கடல்கிளர்ந்து மேலே அண்டபித்தியளவுஞ் சென்று நூக்கினாலும் அழியமாட்டார்களென்றது – பிறப்பதும் இறப்பதுமாகிற விகாரங்களுக்கு ஆளாகாமல்ழூ பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டேத்தப் பெறுவர் என்றவாறு.

English Translation

When the flood of deluge waters rise and touch the sky, those who carry the Lord's will on their heads will come to no harm, know this O Heart, Our Lord resides amid waters that spil gems which make day out of night, by their radiance. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram, our destination.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்