விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று*  முனியாளர் திரு ஆர்* 
    பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு*  கூட எழில் ஆர்*
    மண்ணில் இதுபோல நகர் இல்லை என*  வானவர்கள் தாம் மலர்கள் தூய்* 
    நண்ணி உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.           

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எண்ணில் - ஆராயுமளவில்
நினைவு எய்தி இறை - தியானத்திற்கு இலக்காகக் கூடிய ஸ்வாமி
இனி இல்லை என்று - இவனைக் காட்டிலும் வேறொருவனில்லை யென்று (நிச்சயித்து)
முனியாளர் - மஹாமுனிகள்
திரு ஆர் பண்ணில் மலி - அழகுமிக்க இசையினால் நிறைந்த

விளக்க உரை

ஸநகஸநந்தநாதி மஹர்ஷிகள் ‘இப்பெருமானன்றிப் பரதெய்வம் பிறிதொன்றுமில்லை’ என்று துணிந்து ழூபண்ணார் பாடலில் கவிகளைச் சொல்லிப் பாடி ஆடுகின்றனராம்; அவர்களோடு கூட வானவர்களும் ‘பூமண்டலத்தில் இதுபோன்ற திவ்யதேசம் வேறொன்றில்லை’ என்று புகழ்ந்துகொண்டு திரண்டு வாழ்கின்றனராம். ஆகவிப்படி முனிவருமமரரும் தொழுதேத்தி இறைஞ்சுமிடமான நந்திபுரவிண்ணகரத்தை மனமே! நண்ணு என்றாராயிற்று. (நினைவு எய்தி,) ‘எய்தி’ என்பது வினையெச்ச மன்று; பெயர்ச்சொல்; எய்து – பகுதி; இ-பெயர்விகுதி. எய்துமவன் என்கை. (நினைப்பாருடைய) நினைவுகளை எய்துமவன் - த்யானத்திற்கு விஷயமாயிருக்குமவன் என்றபடி. இனி ‘எய்தி’ என்றவிதனை வினையெச்சமாகக்கொண்டு முரைக்கலாம்; எண் இல் - கணக்கில்லாத (அளவிறந்த), நினைவு – எண்ணங்களை எய்தி – அடைந்து, ‘முனியாளர் கீதமொடுபாடி, என்றதோடு அந்வயம். மஹர்ஷிகள் ‘எம்பெருமானைத் தொழவேணும், துதிக்கவேணும், திருவாராதனம் செய்யவேணும்’ என்றிங்ஙனே பலபல பாரிப்புகள் கொண்டு பாடியாட என்றவாறு,

English Translation

Bards praise, "You cannot think of a better god', and sing and dance beautiful Pann based songs, while gods praise, "You cannot find a better city,' and offer flowers with worship, Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram, our destination.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்