விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்*  துணை ஆக முன நாள்* 
    வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்*  இனிது மேவும் நகர்தான்*
    கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்*  எழில் ஆர் புறவு சேர்* 
    நம்பி உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாம் ஒருவர் - லோகவிலக்ஷணராகத் திருவவதரித்த ஸ்ரீராமபிரானாகிய ஒருவர்
தம்பியொடு - தம்பியான லக்ஷ்மணனும்
தன் காதல் துணைவி - தனது காதலே வடிவெடுத்த பத்னியான ஸீதையும்
துணை ஆக - ஸஹாயமாகக் கூடவர,
வெம்பி எரி கானகம் - தீக்ஷ்ணமாய்ப் பற்றியெரிகின்ற காட்டிலே

விளக்க உரை

இப்பாட்டில் ‘நகர்’ என்ற சொல் இரண்டாமடியிலும் ஈற்றடியிலுமாக இருமுறை வந்திருக்கின்றது : தம்பியொடு……….. கானகமுலாவுமவர்தாம் இனிதுமேவுநகா – அயோத்திமாநகர், அல்லது பரமபதம் என்று கொண்டு, அதுபோன்றதாய் நம்பியுறைகின்ற நகராகிய நந்திபுர விண்ணகரம் என்று முறைக்கலாம்.

English Translation

There in the yore the prince who walked through the blazing forest with his wife and younger brother sweetly resides here, where cockoos hop and sing on tree tops, and peacocks dance to their funes in bright and beautiful groves. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram, our destination.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்