விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என*  வந்த அசுரர்* 
    தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக*  நொடி ஆம் அளவு எய்தான்*
    வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்*  இவை அம்கை உடையான்* 
    நாளும் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மூள எரி சிந்தி - (கண்டவிடமெங்கும்) புகையும்படியாக நெருப்புகளைக் கொட்டி
அமர்செய்தும் என வந்த அசுரர் அவர் - ‘யுத்தம் செய்வோம்’ என்று வந்த அசுரர்களினுடைய
தோளும் தாளும் முடியோடு - தோள்களும் கால்களும் தலைகளும்
பொடி ஆக - பொடிபொடியாம்படி
நொடி ஆம் அளவு - ஒருநொடிப் பொழுதில்

விளக்க உரை

அசுரர்கள் போர்க்குவரும்போது கண்டவிடமெங்கும் நெருப்புகளை வாரிக்கொட்டுவதும் கோபாவேசங்கொண்டு கோலாஹலங்கள் பண்ணுவதும் வழக்கம்; அங்ஙனம் வருமசுரர்களின் தோளுந் தாளுந் தலையும் ஒருநொடிப் பொழுதில் பொடிபட்டொழியும்படி அம்புகளைச் செலுத்தி வெற்றிபெற்ற பெருமான் இன்னமும் அப்படிப்பட்ட ஆஸுரப்ரக்ருதிகளை யழிப்பதற்காகப் பஞ்சாபுதங்களையும் உடன்கொண்டவனாகி நந்திபுர விண்ணசரத்திலே நித்யவாஸம் பண்ணுகிறானென்க.

English Translation

Came to the war again raging like fire and smoke clannish Asuras with flashing teeth, He bore a conch and a discus that shone with the light of a thousand one blazing suns, mace and a dagger and bow and arrow that did cut the Asuras to pieces and mince. Bow to the Lord of the Nagar-Nandipura Vinnagaram our destination

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்