விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விலங்கலால் கடல் அடைத்து*  விளங்கிழை பொருட்டு*  வில்லால் 
    இலங்கை மா நகர்க்கு இறைவன்*  இருபது புயம் துணித்தான்*
    நலம் கொள் நான்மறை வல்லார்கள்*  ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு* 
    மலங்கு பாய் வயல் திருப்பேர்*  மருவி நான் வாழ்ந்த ஆறே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளங்கு இழை பொருட்டு - விளங்குகின்ற ஆபரணங்களை அணியத்தகுந்தவளான பிராட்டிக்காக
விலங்கலால் - மலைகளினால்
கடல் - தெற்குஸமுத்ரத்தை
அடைத்து - அணை செய்து

விளக்க உரை

(நலங்கொள் நான்மறை இத்யாதி.) வைதிகர்கள் உரக்க வேதகோஷஞ் செய்வதைக் கேட்ட மீன்கள் தங்களை வெருட்டுஞ்சொற்களென்று ப்ரமித்துத் துள்ளியோடுகின்றனவாம் வயல்களில். குளக்கரையில் வைதிகப்ராஹ்மணர்கள் ப்ரஹ்மயஜ்ஞ ப்ரச்நம உச்சரிக்கும்படியான வைதிகலக்ஷமி விளங்கும் திவ்யதேசமென்று குறிப்பிட்டவாறு. மலங்கு – மீன்களில் ஓர்வகைச்சாதி

English Translation

Making a bridge over the ocean with rocks, the Lord entered Lanka city to redeem the jewelled Sita, and severed the ten heads, and twenty arms of the Rakshasa. He resides where Vedic seers chant the Vedas adeptly. hearing which fish in the watered groves dance enchanted. How easily have I attained him through chanting his names!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்