விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பூண் முலைமேல் சாந்து அணியாள்*  பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள* 
  ஏண் அறியாள் எத்தனையும்*  எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
  நாள் மலராள் நாயகன் ஆய்*  நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
  ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எத்தனையும் ஏண் அறியாள் - எந்த வஸ்துவையும் நெஞ்சினால் நினைக்கின்றாளில்லை;
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும் - ‘என் ஸ்வாமியின் திருவரங்கம் எங்கே?’ என்பதொரு வார்த்தையையே சொல்லிக் கொண்டிருக்கிறாள்;
நாள் மலராள் நாயகன் ஆய் - செவ்வித்தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு வல்லபனானவனும்
நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி - நமக்கெல்லாம் தெரியும்படியாகத் திருவாய்ப்பாடியில் வளர்ந்தவனுமான பெருமான்
ஆண் மகன் ஆய்
 
-
 
பெரிய ஆண்பிள்ளையாய்க் கொண்டு

விளக்க உரை

சிறுமிகட்கு லக்ஷணமாக முலைத்தடத்தில் சந்தனமணிந்து கொள்வதும் கண்களில் மையிட்டுக்கொள்வதும் விளையாட்டுக் கருவிகளினால் போதுபோக்குவதும் என் மகட்கு மாறிவிட்டது. எம்பெருமான் விரும்பிவந்து அணையப்பெறாத இம்முலைகட்கு அலங்காரம் வேணுமோ? என்று வெறுப்புற்றுப் பூண்முலைமேல் சாந்தணியாள். அல்லும் பகலும் அழுதுகொண்டே போதுபோக்கும்படியாக, நம்மை எம்பெருமான் செய்துவிட்டனனாதலால், அழுங்கண்களுக்கு அஞ்சனமில்லாமை ஒரு குறையோவென்று மனம் நொந்து பொருகயற்கண்மை யெழுதாள். பூவைபேணாள் = பூவையென்று – கிளி, குயில், நாகணவாயப்புள் - இவற்றுக்கும் பெயர். சிறுமியர் லீலார்த்தமாகச் சில பறவைகளை வளர்த்துப் போதுபோக்குவதண்டு. நேற்றுவரையில் இப்பரகாலநாயகியும் அங்ஙனமே போதுபோக்கா நின்றிருந்தவள் இன்று அதனருகுஞ் செல்கின்றிலள். விஷத்தைப் பார்ப்பதுபோல் அதனைப் பார்க்கிறாள். எத்தனையும் ஏணறியாள் - இந்த லோகத்தைப் பற்றின சிந்தையே இவளுக்கில்லை என்றபடி. ஏண் - எண்ணுதல்; முதனிலை திரிந்த தொழிற்பெயர். ‘எம்பெருமான் திருவரங்கமெங்கே?’ என்கிற வார்த்தையொன்றே தொடர்ந்து வருகின்றது.

English Translation

She does not deck her breast nor line her warring fish-eyes nor play dolls; Haltingly only asks, "Where is my Lord's abode, Tiruvarangam?" Lord of the lotus-dame, -we all know how you grew up in Gokul –Male cowherd, how can I accept what he did to my daughter frail!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்