விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காவிப் பெருநீர் வண்ணன்*  கண்ணன்
  மேவித் திகழும்*  கூடலூர்மேல்*
  கோவைத் தமிழால்*  கலியன் சொன்ன* 
  பாவைப் பாட*  பாவம் போமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காலி பெரு நீர் வண்ணன் கண்ணன் - கருநெய்தற் பூப்போலவும் கடல்போலவும் நிறமுடையனான எம்பெருமான்
மேவி திகழும் கூடலூர் மேல் - பொருந்தி விளங்கப்பெற்ற கூடலூர் விஷயமாக
கலியன் - திருமங்கைமன்னன்
கோவை தமிழால் சொன்ன - ஒழுங்கான தமிழினால் அருளிச் செய்த
பாவை - இப்பாசுரங்களை

விளக்க உரை

காவி – நீலோற்பலம். காவிப் பெருநீர் – உம்மைத்தொகை. கோவைத் தமிழ் - ஒழுங்கான தமிழ். கோக்கப்பட்ட மாலைக்கும் கோவை யென்று பெயராதலால், மாலைபோல் போக்கியமான தமிழ் என்னவுமாம்.

English Translation

Those who can sing this garland of sweet Tamil songs by Kaliyan,-on the dark water-lily-hued krishna who resides in Kudalur, -will destroy karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்