விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  துன்னி மண்ணும் விண் நாடும்*  தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்* 
  அன்னம் ஆகி அரு மறைகள்*  அருளிச்செய்த அமலன் இடம்*
  மின்னு சோதி நவமணியும்*  வேயின் முத்தும் சாமரையும்* 
  பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்*  புள்ளம்பூதங்குடி தானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மண்ணும் விண்நாடும் தோன்றாது - மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒன்றும் தெரியாதபடி
இருள் ஆய் துன்னி மூடிய நாள் - அந்தகாரமேயாய் நெருங்கி மூடிக்கிடந்த வளவிலே
அன்னம் ஆகி அருமறைகள் அருளிச்செய்த - ஹம்ஸரூபியாய் அவதரித்து அருமையான வேதங்களை மீண்டும் வெளிப்படுத்தியருளின
அமலன் - பவித்திரனான பெருமானுடைய
இடம் - இருப்பிடமாவது

விளக்க உரை

வேயின்முத்தும் = மூங்கில்களினின்றும் முத்து உதிர்வதாகச் சொல்லுவர்கள். “மின்னு சோதி நவமணியும்” என்று சொல்லிவைத்து நவமணிகளுட்சேர்ந்த முத்தையும் பொன்னையும் தனிப்படவுஞ் சொல்லியிருப்பதால் இவையிரண்டும் திருக்காவிரியில் அதிகமாகக் கொணரப்படும் என்றுணர்க. பின்னடிகட்குப் பொருத்தமாக “சஞசச்சாமர சந்த்ர சந்தந மஹா மாணிக்ய முக்தோத்கராந் காவேரி லஹாரீகரைர்விதததீ பர்யேதி ஸா ஸேவ்யதாம்” என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்வத்லோகம் அநுஸந்திக்கத்தகும்.

English Translation

When the Earth-world and Sky-world had not appeared, and an envelope of thick darkness. Spread out everywhere, the Lord came as a swan and lit the world with gems of the Vedas, He resides, -where the river Ponni flows with waves washing out radiant sparkling gems, Bamboo-pearls, gold and whisks, -in Pullam-Budangudi, yes, always!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்