விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த*  மாவலி வேள்வியில் புக்கு* 
  தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு*  திக்கு உற வளர்ந்தவன் கோயில்*
  அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்*  அரி அரி என்று அவை அழைப்ப* 
  வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்*  திருவெள்ளியங்குடி அதுவே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாவலி - மஹாபலியினுடைய
வேள்வியில் - யாகத்திலே
தௌ;ளிய குறள் ஆய்புக்கு - தெளிவுள்ள வாமந மூர்த்தியாய்க்கொண்டு பிரவேசித்து
மூ அடி கொண்டு - (அந்த மாவலியிடமிருந்து) மூவடி நிலத்தை இரந்து பெற்று
திக்கு உற வளர்ந்தவன் கோயில் - எல்லாத் திசைகளிலும் வியாபிக்கும்படியாக வளர்ந்த பெருமான் வாழுமிடம் (எதுவென்றால்);

விளக்க உரை

‘யாகம் செய்தல்’ என்றொரு வியாஜத்தையிட்டு ‘என்னுடைய ஸர்வஸ்வத்தையும் பிறர்க்கு உரித்தாக்கக் கடவேன்’ என்று ஸங்கல்பித்துக்கொண்ட மஹாபலியின் யஜ்ஞபூமியில் வாமநப்ரஹ்மசாரியாய்ச்சென்று மூவடிநிலம் இரந்து பெற்றுத் திசைகளெல்லாம் விம்மவளர்ந்த பெருமான் வாழுமிடம் திருவெள்ளியங்குடி. முதலடியில் ‘உணர்ந்து’ என்றும் பாடமுண்டு; அப்போது, ‘மாவலியானவன் வேண்டுவார்க்கு வேண்டினபடி கொடுப்பதாகிற நற்காரியஞ் செய்கிறானென்று தெரிந்துகொண்டு அவனது வேள்விக் கெழுந்தருளி’ என்று பொருளாம். (அள்ளியம் பொழில்வாய் இத்யாதி.) எதுகைநயம் நோக்கி அல்லியை அள்ளியென்ற தாகக் கொள்க. அன்றியே, ‘அளி’ என்பதை அள்ளியென்று விரித்துக்கிடப்பதாகவுங்கொள்வர்: குளிர்ச்சி பொருந்திய என்றபடி. திவ்யதேசத்தில் வாழுங் குயில்களாகையாலே அங்குள்ள பாகவதர்களின் அநுஸந்தானமே அவற்றுக்கும் அமைந்து ‘ஹாரிர்ஹாரி: ஹாரிர்ஹாரி:’ என்று சோலைத்தடங்களிலே கூவுகின்றனவாம்.

English Translation

Mabali was intent on collecting merit through good Karmas Going to his sacrifice as a beautiful manikin, the Lord asked for three steps of land and grew to cover the eight Quarters. He resides in the temple,- where the fertile groves are haunted by cuckoos which keep calling, "Hari, Hari', pure souls offer worship, and the Lord showers his grace, -of Tiruvelliyangudi, that is it!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்