விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து*  பாரதம் கையெறிந்து*  ஒருகால் 
  தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த*  செங்கண்மால் சென்று உறை கோயில்*
  ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி*  எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி* 
  சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற*  திருவெள்ளியங்குடி அதுவே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாரினை உமிழ்ந்து - அவ்வுலகங்களை வெளிப்படுத்தினவனாயும்
பாரதம் கையெறிந்து - பாரதயுத்தத்தில் கையுமணியும் வகுத்தவனாயும்
தோரினை ஊர்ந்து - (அர்ஜுநனுடைய) தேரை நடத்தி
தோரினை துரந்த - (எதிரிகளினுடைய) தேர்களைப் பங்கப்படுத்தினவனாயுமுள்ள
செம் கண் மால் - புண்டரி காக்ஷன்

விளக்க உரை

பின்னடிகளின் கருத்து :- இத்தலத்து வயல்கள் எப்போதும் ஏர்கொண்டு உழப்படுவதால் ‘இப்படி அபாயங்களுக்குக் காரணமான இவ்விடம் நமக்கு வாஸயோக்யமல்ல’ என்று கருதின வாளைமீன்கள் நிர்ப்பயமாக வாழவேண்டிச் சிறந்த பொய்கைகளிலேசென்று சேர்கின்றனவாம். இதனால் எப்போதும் ஏருழும்படியான நிலவளம் சொன்னபடி. ஸம்ஸாரத்தில் வாழ்ச்சி ஆபத்துக்களுக்கு இடமென்று துணிந்து அதனைவிட்டு நித்யாநந்தமான பரமபதத்தில் வாஸத்தைக் கருதுகின்ற முமுக்ஷுக்களின்படியை இங்ஙனே யெடுத்துக்காட்டினரென்ப.

English Translation

He who in yore swallowed the Earth and brought it out again, then fought the great Bharata war, driving a charriot, pursuing chariots, is our senkanmal residing in the temple, –with fields around, ploughed well, where Valai fish jump out in fear saying no place for us here, anc enter the water tanks, -of Tiruvelliyangudi that is it!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்