விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முன்னை வண்ணம் பாலின் வண்ணம்*  முழுதும் நிலைநின்ற* 
  பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்*  வண்ணம் எண்ணுங்கால்* 
  பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்*  புரையும் திருமேனி* 
  இன்ன வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வண்ணம் எண்ணுங்கால் - தேவரீருடைய திருமேனி நிறத்தை ஆராயுமளவில்,
முன்னை வண்ணம் - முதலதான கிருதயுகத்தில் கொண்ட நிறம்
பாலின் வண்ணம் - பாலின் நிறமான வெண்மையாயிருக்கும்;
முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம் - எப்போதும் நிலைநிற்பதாயும் பிந்தின கலியுகத்திற்கொண்டதாயுமுள்ள நிறம்
கொண்டல் வண்ணம் - காளமேகத்தின் நிறமான கருமையாம்;

விளக்க உரை

உரை:1

எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் நிறத்தைக்கொள்வன்; கிருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால்போன்ற நிறத்தைக்கொள்வன்; த்ரேதாயுகத்திலே சிவந்த நிறத்தைக்கொள்வன்; த்வாபரயுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வான்; கலியுத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவா ரில்லாமையாலே இயற்கையான நீலநிறத்தைக்கொன்வன். இந்தளூரீர்! ஊமக்குப் பல நிறங்கள் உள்ளனவாக சாஸ்த்ரங்களில் விளங்காநின்றது; இங்கு அர்ச்சையாக எழுந்தருளியிருக்கு மிருப்பிலே எந்தநிறம் கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியவேண்டாவோ? “இதோபாராய், இதுவே என்வண்ணம்” என்று சொல்லி வடிவைக் காட்டியருளீர் என்கிறார்.

உரை:2

மூங்கிற்குடி என்ற குலத்தில் உதித்தவராகிய அமுதனாரின் அழகான திருவடித் தாமரைகள் இரண்டையும் என்னுடைய தலைக்கு அலங்காரமாகச் சேர்த்துக் கொண்டேன். இதன் மூலம் எனது பாவகர்மங்கள் அனைத்தும் அகன்று போகும்படி ஆனது. இவ்விதம் பாவங்கள் நீங்கிய பின்னர், யமபுரியில் உள்ள யமதூதர்களிடம், எனது கர்ம அனுபவம் காரணமாக நான் அகப்படுவேனா? (மாட்டேன்).

English Translation

O Lord of Indolur! In the beginning you are white, in the end you are black, The colours in-between are red and yellow. Alas, you do not let us see what colour you are now.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்