விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள*  எம்மைப் பணி அறியா* 
  வீட்டீர் இதனை வேறே சொன்னோம்*  இந்தளூரீரே*
  காட்டீர் ஆனீர்*  நும்தம் அடிக்கள் காட்டில்*  உமக்கு இந்த 
  நாட்டே வந்து தொண்டர் ஆன*  நாங்கள் உய்யோமே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இதனை வேறே சொன்னோம் - மேற்சொல்லப்போகிற விஷயத்தை முக்கியமாக விண்ணப்பஞ் செய்கிறோம்;
நுந்தம் அடிக்கள் காட்டீர் ஆனீர் - தேவரீருடைய திருவடிகளைக் காட்டாமல் போனீர்;
காட்டில் - காட்டியருளினால்,
இந்த நாட்டே - இந்த நாட்டிலே
வந்து - உம்முடைய அடிமைக்கு இசைந்துவந்து

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் எம்பெருமானடைய ஸர்வஜ்ஞத்வத்திற்குக் குறைகூறினார்; அவனுடைய ஸர்வசக்தித்வத்திற்கும் குறைகூறுகின்றாரிப்பாட்டில். (நீர் பணிகொள்ளமாட்டீரானீர்) பெருமாளே! நீர் ஸர்வசக்தராயிருந்து வைத்தும் என்னிடத்திலிருந்து ஒரு கைங்கரியங்கொள்ள சக்தியற்றவரானீர். இந்த நீசனால் என்ன கைங்கரியம் பண்ணமுடியும் என்று நினைத்து உபேக்ஷிக்கின்றீரேயன்றி, நிறையொன்றுமிலாத நீசனேனையும் கைங்கரியங்களுக்கு ஆளாம்படி மண்கட்டியாகப் படைத்துவைத்தாலும் ஒருவாறு ஆறியிருக்கலாம். சேதநகோடியிலே படைத்துவைத்தீர்; சேஷத்வமே ஸ்வரூபமென்று உணர்த்திவைத்தீர்; கைங்கரியம் செய்யாவிடில் சேஷத்வம் நிறம்பெறத என்றும் உணர்த்திவைத்தீர். இவ்வளவு அறிவைப் பிறப்பித்துவைத்து ஒன்றுக்கு முதவாதபடி தள்ளிவைத்திருக்கிறீர். கைங்கரியங்கொள்ளவிடினும் திருவடியையாவது ஸேவை ஸாதிப்பிக்கலாமே; அந்த பாக்கியமும் பெற்றிலேன்; திருவாயையுங் காட்டாதொழிந்தீர். பிறர்க்கென்றே ஏற்பட்டிருக்கிற திருவடிகளையும் உமக்காகக் கொண்டிருக்கிறீர்போலும். இக்கொள்கையைத் தவிர்ந்து திருவடிகளை ஸேவை ஸாதிப்பித்தீராகில் இந்த ஸம்ஸார மண்டலத்திலேயே அடியேன் உஜ்ஜீவித்துப் போகமாட்டேனே? என்கிறார்.

English Translation

O Lord of Indalur! You have rejected our service, you have denied us the pelasure, we say this openly, you have refused to show us your feet. If only you did, wouldn't all devotees in this wide world find elevation of spirit?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்