விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்*  ஒண் சுடரோடு உம்பர் எய்தா* 
  நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்*  தென் திசைக்குத்
  திலதம் அன்ன மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
  பலரும் ஏச என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் மடந்தை என் பெண்ணானவள்
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் லோகமெல்லாம் கொண்டாடும்படியுள்ள ஒருவன் என்றும்,
ஒண் சுடரோடு விளங்குகின்ற சந்தரஸூர்யர்களாலும்
உம்பர் மற்றுமுள்ள தேவர்களாலும்
எய்தா நிலவும் கிட்டமுடியாமல் ஜ்வலிக்கிற

விளக்க உரை

(ஒண்சுடரோடு இத்யாதி.) ஸூர்யன் முதலான சுடுர்ப் பொருள்களின் சோதியையும் வென்று விளங்குஞ் சுடரமைந்த திருவாழியாழ்வானைத் திவ்யாயுதமாக வுடையவன் என்கை. “ஒண்சுடரோடு உம்பரெய்தா” என்கிறவிசேஷணம் ஆழிப்படையில் அந்வயிக்கவுமாம், ஆழிப்படையனான எம்பெருமானிடத்து அந்நயிக்கவுமாம். ஸூர்ய சந்த்ராதி தேவர்களால் திருவாழியாழிவானும் அணுக முடியாதவன், எம்பெருமானும் அணுக முடியாதவன். நேசன் - அடியவர்கள் திறத்தில் அன்புதானே ஒருவடிவு கொண்டவன். ‘ஸ்நேஹ’ மென்னும் வடசொல் நேசமெனத் திரியும். “தென்திசைக்குத் திலதமன்ன”; என்கிற விசேஷணம் மறையோரிடத்தும் நாங்கையிடத்தும் அந்வயிக்கும். பலருமேச – உண்டியே உடையே உகந்தோடும் ஸம்ஸாரிகளிடையே எம்பெருமால் உகந்தருளின நிலத்தைப் பாடுவது ஏசுகைக்கு இடமாகுமன்றோ. கூறைவேணும், சோறுவேணுமென்று பாடினாலன்றோ பலரும் உகப்பர்கள்? பார்த்தன்பள்ளி பாடவேபலரும் ஏசும் படியாயிற்று, ஸம்ஸாரிகளுடைய காரியங்களெல்லாம் பகவத் பக்தர்கட்குப் பரிஹாஸகரமாய் இருப்பதுபோல, பகவத் பக்தர்களுடைய காரியங்களும் ஸம்ஸாரிகளுக்குப் பரிஹாஸசரமாயிருக்குமே.

English Translation

"Lord receiving worship of the worlds and wielding discus weapon!" "Even all the radiant gods never attain adorable you?", "Tilaka-to-the South in Nangai Deva-deva Lord amid seers!", Earning all the world's abusemy daughter sings of Parttan-Palli O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்