விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வைத்த நெய்யும் காய்ந்த பாலும்*  வடி தயிரும் நறு வெண்ணெயும்* 
  இத்தனையும் பெற்றறியேன்*  எம்பிரான்! நீ பிறந்த பின்னை*
  எத்தனையும் செய்யப் பெற்றாய்;*  ஏதும் செய்யேன் கதம் படாதே* 
  முத்து அனைய முறுவல் செய்து*  மூக்கு உறிஞ்சி முலை உணாயே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எம் பிரான் - எமது உபகாரகனே;
வைத்த நெய்யும் - உருக்கி வைத்த நெய்யும்;
காய்ந்த பாலும் - (ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும்;
வடி தயிரும் - (உள்ளநீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்;
நறு வெண்ணெயும் - மணம்மிக்க வெண்ணெயும்;

விளக்க உரை

எம்பிரானே! நீ குழந்தையாகப் பிறந்த பிறகு, நான் உருக்கி வைத்த நெய்யும், காய்ச்சின பாலும் தோய்த்த தயிரும் மணம் வீசும் வெண்ணை அதையெல்லாம் தரவில்லை என்று கோபப்படாதே(கதம்படாய்). முத்துப் போன்ற பற்களால் சிரித்தபடி, உன் மூக்கை உறிஞ்சிக் கொண்டு என் முலைப்பால் சாப்பிடு.

English Translation

My master, ever since you were born, I know not where all the saved Ghee, boiled milk, drained curds and fresh butter went. You go on doing what you want; I do nothing lest I anger you. Making a pea

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்