விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அரவு அணையாய்! ஆயர் ஏறே!*  அம்மம் உண்ணத் துயிலெழாயே* 
  இரவும் உண்ணாது உறங்கி நீ போய்*  இன்றும் உச்சி கொண்டதாலோ*
  வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய்*  வன முலைகள் சோர்ந்து பாயத்* 
  திரு உடைய வாய்மடுத்துத்*  திளைத்து உதைத்துப் பருகிடாயே (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அரவு அணையாய் - சேஷசாயியானவனே;
ஆயர் ஏறே - இடையர்களுக்குத் தலைவனே;
நீ இரவும் உண்ணாத - நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல்;
உறங்கிப் போனாய் - உறங்கிப்போய்விட;
இன்றும் - இப்போதும்;

விளக்க உரை

(அரவணையாய்) எம்பெருமான் திருவனந்தாழ்வானாகிற படுக்கையைவிட்டு க்ருஷ்ணனாகத் தோன்றினாலும் சென்றாற் குடையாம் என்கிறபடியே அவ்வக்காலத்துக்கு ஏற்ற கோலங்கொண்டு அடிமை செய்பவனான கரத்திருவனந்தாழ்வான் கண்ணபிரானுக்குத் திருப்பள்ளி மெத்தையாய் இனிது தூங்குவதற்கு உதவுகின்றானென்க. அம்ம முண்ண என்றது - கண்ணனுடைய குழந்தைப் பருவத்திற்குத் தக்கபடியாக யசோதை சொல்லியதாகும். சிங்கம் முதலியவற்றின் ஆணை யுணர்த்துகின்ற ஏறு என்ற பெயர் இலக்கணையால் ப்ரதாநன என்ற பொருளைத்தரும். இரண்டாமடியின் ஈற்றிலுள்ள ஆல் - ஆதலால் என்பதன் சிதைவு; இனி ஆல் ஓ - இரண்டும் இரக்கப் பொருளைக் குறிப்பன வென்றுமாம். வயிறசைந்தாய் = நன்னூலார் சினை வினை சினையொடும் முதலொடுஞ் செறியும் என்றாராதலின் சினைவினை முதலோடு செறிந்ததென்க. வனப்புமுலை என்கிறவிது - வனமுலை என்று விகாரப்பட்டதென்பர்; வனமே நீரும் வனப்பு மீமமுந் துழாயும் மிகுதியுங் காடுஞ் சோலையும் புற்றுமனவே புகலுமெண் பேரே என்ற நகண்டின்படி வனம் என்ற சொல்லோ அழகைக் குறிக்குமென்பதும் பொருந்தும்.

English Translation

O cowherd child, Lord who reclines on a serpent-bed, wake up to take suck. Last night you went to sleep without supper, it is almost mid-day now. I do not see you coming. Your belly is flat, my hea

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்