விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்*  செழு நிலத்து உயிர்களும் மற்றும்* 
  படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை*  பங்கயத்து அயன் அவன் அனைய*
  திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திடம் - திடமான
விசும்பு எரி நீர் - ஆகாசம் அக்நி ஜலம் முதலான பஞ்சபூதங்களும்
திங்களும் - சந்திரனும்
சுடரும் - ஸூர்யனும்
செழு நிலத்து பிராணிகளும் - வளம்மிக்க பூமியிலுள்ள பிராணிகளும்

விளக்க உரை

திடப்பொருள்கள், ஆகாயம், காற்று, நீர், நிலம் இவையெல்லாவற்றிலும் படர்ந்த பொருள் ஆனவன் அவைகளில் உடலுக்குள் உயிர்போல மறைந்து உள்ளேயும் வெளியேயும் வியாபித்தவன். வேதத்தில் உள்ளவன். இவைகளையெல்லாம் உண்டவனும் இவனே. நம்மாழ்வாரின் கடவுள் தத்துவத்தின் அடிப்படையான விசிஷ்டாத்வைதக் கருத்துக்களின் அடிப்படையும் ஆனது இப்பாடல். பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருள்களிலும் சாரமாக விரவியிருப்பவன் கடவுள் என்கிற தத்துவத்தை விஞ்ஞானத்தால் கூட இந்த நாட்களில் மறுக்க முடிவதில்லை.

English Translation

Sky, Fire, water, Moon and the Sun too, Earth and the beings-living all, -He who is all these and other things too, lives in the midst of Brahma-like Firm-of-speech-Vedic-Seers residing in Nangur, -Semponsei Koyil is in their midst, -seening my lady-lord, dark as the ocean, I have found my spiritual elevation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்