- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து* அதன் பாகனைச் சாடிப் புக்கு*
ஒருங்க மல்லரைக் கொன்று* பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு* கழனியில் மலி வாவி*
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்* வண்புருடோத்தமமே.
காணொளி
பதவுரை
பரு கை யானையின் கொம்பினை பறித்து - பருத்த துதிக்கையையுடைய (குவலயா பீடமென்னும்) யானையினது தந்தங்களை பிடுங்கிக் கொன்று,
அதன் பாகனை சாடி புக்கு - அந்த யானையின் பாகனையும் உயிர் தொலைத்திட்டு உள்ளே நுழைந்து
மல்லரை ஒருங்க கொன்று - மல்லர்களை ஒன்றுசேர முடித்திட்டு
பின் கஞ்சனை உதைத்தவன் - அதற்குப் பிறகு கம்ஸனை முடித்தருளிய கண்ணபிரான்
உறை கோயில் - நித்யவாஸம் பண்ணுமிடம்;
விளக்க உரை
English Translation
The Lord who plucked the tusk of the rutted elephant, killed it, killed the mahout, killed the wrestlers, and killed Kamsa, resides at Nangur, -where sugarcane and paddy grow tall in fields watered by big wells, and groves touch the sky, -In the temple of Van-Purushottamam.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்