விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கலைஇலங்கும் அகல்அல்குல், அரக்கர் குலக்கொடியைக்*  காதொடு மூக்குஉடன்அரிய, கதறி அவள்ஓடி* 
  தலையில் அங்கை வைத்து, மலைஇலங்கை புகச்செய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
  சிலைஇலங்கு மணிமாடத்து, உச்சிமிசைச்சூலம்*  செழுங்கொண்டல் அகடுஇரிய, சொரிந்த செழுமுத்தம்* 
  மலைஇலங்கு மாளிகைமேல், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சிலை இலங்க மணி மாடத்து உச்சி மிசை குலம் - ஓளி விளங்குகின்ற ரத்தனங்களிழைத்த மாளிகைகளின் மூடிமேலேயிரக்கிற குலங்கள்
செழு கொண்ர்ல் அகடு இரிய - அழகிய மேகங்களினுடைய கீழ்யிவற்றைப் பிளக்க (அதனாலே)
சொரிந்த செழு முத்தம் - பெய்த அழகிய முத்துக்கள்
முலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்து நாங்கூர் - மலைப்போல் விளங்குகின்ற மாளிகைகளின் மேலே குவிந்து கிடக்கப்பெற்ற திருநாகூரில்

விளக்க உரை

திருநாகூரில் செல்வச் சிறப்பை வருணிக்கிறார். பின்னடிகளில் மாட மாளிகைளின் முனையிலே பாதுகாப்புக் குறுப்பாகச் சூலங்கள் நாட்டப்படும்: (“ நீடுமாடத் தனிச்சூலம் போழ்கக் கொண்டல் துளிதூவ” (1593) என்பர் திருவழுந்தூர்ப் பதிகத்திலும்) அந்த சூலங்கள் மேக மண்டவத்தளவம் ஓங்கி விழுந்து அவை மேகங்களின் வயிறுகளைக் குத்திப் பிளக்க அவற்றினின்றும் முத்துக்கள் சிதறி விழுந்து மாளிகைகளிலெங்கும் மலிந்து கிடக்கின்றன.

English Translation

Then in the yore, the dark hued Lord chopped off the ears and nose of the Rakshasa clan’s broad hipped Surpanakha, and made her raise her hands over the head and run shrieking to her Lanka haunt. He resides permanently in Nangur where the tridents atop the gemset-high-rise mansions tear the belly of big rain clouds and make them spill their pearls like mountain-heaps everywhere. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்