விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு*  தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை* 
  நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
  சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி*  செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே 
  வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான்; - அழகிய நீலமேகம் போன்ற திருமேனியையுடையவனுயுமிருக்கிற எம்பெருமான்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - எப்போதும் திருவுள்ள மூவந்து போக்கியமாக பொருந்தி வாழுமிடமாய்
சலம் கொண்டு - தண்ணீரைப்பகுதி
மலர்செழியும் - புஷ்பங்களைச் சொரிகின்ற
ஓண் மல்லிகை செருந்தி சண்பகங்கள் - அழகிய மல்லிகைச் செடிககளும் சுரபுன்னை மரங்களும் சண்பக மரங்களும்

விளக்க உரை

முதலடியில் ‘ஷனு’ என்னும் வடசொல் சலமெனத் திரிந்தது. மூன்றாம்மடியில் ஐலமென்பது சலமென்றாயிற்று. இச்சொல்லுக்கு தண்ணீரென்று பொருள் கொள்ளமால் சீற்ற பெரியதிருமொழி - முன்றாம்பத்தி கூதிரு.சலங்கொண்டவிரணியன் மென்று பொருள் கொண்டு, மல்லிகை செருந்தி சண்பகங்கள் ஒன்றோடென்று போரிடுவன போன்று மிகமிக மலர்சொரிகின்றமையைக் கூறுவதாக உரைப்பதுமொக்கும். வித்யார்த்திகள் ஒருவருக்கொருவர் ஸ்பர்த்தையோடு படித்துக் கல்வியில் தேர்ச்சியடைவது போலாம்.

English Translation

Then in the yore the Lord tore apart the angry Hiranya’s chest, and churned the deep ocean for ambrosia. Like the benevolent rain cloud, he has a dark hue and resides permanently at Nangur where Kayal fish dance in the water filled groves, which waft the fragrance of Jasmine, Serundi and Senbakam flowers. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்