விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்*  மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
  என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*
  கண்டார் வணங்கக் களி யானை மீதே*  கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்* 
  விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்*  விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒலி செய்தமிழ் மாலை - அருளிச் செய்த தமிழ்த் தொடையான இத்திருமொழியை
வல்லார் - ஓதவல்லர்கள்
கண்டார்வணங்க - கண்டவரெல்லாம் காலிலே விழும்படி
காளியனை மீதே - மத்தகஜத்தின் மேலேறி (இருந்து)
கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய் - கடல் சூழ்ந்த மண்ணுலகம் முழுமைக்கும் தாங்களே துணையற்ற அரசராகி

விளக்க உரை

இஹலோக புருஷார்த்தங்களை பலனுகக் கூறுதலில் ஆழ்வார்க்கு ஊற்றமில்லை யாயினும், மருந்துதின்னப் பின்வாங்கும் பயல்களை வெல்லக்கட்டியைக் காட்டி ருசிப்பிப்பதுபோல, இஹலோக புருஷார்த்த ஸாதனங்களிலேயே ஊற்றமடைய பிராகிருதர்களையும் இழுத்துப் பிடிக்க வேண்டி இங்ஙனே யருளிச் செய்கிறாரெனக் கொள்க. அடிவரவு :- நந்தா முதலை கொலை சிறை இழை பண் துளை விடை வண்டார்சலம்.

English Translation

This garland of Tamil songs on the Lord of bee-humming groves-surrounded beautiful Nangur’s Manimadakkoyil is sung by the Lord’s ever faithful devotee, the lasting-fame-fertile-Mangai King Kaliyan. Those who master it will rule the ocean-girdled Earth as kings under sky-touching moon-white parasols and rejoice.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்