விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கலைகளும் வேதமும் நீதிநூலும்*  கற்பமும் சொல் பொருள் தானும்*
  மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்*  நீர்மையினால் அருள் செய்து*
  நீண்ட மலைகளும் மாமணியும்*  மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற* 
  அலைகடல் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நீதி நூலும் - இதிஹாஸங்களையும்
கற்பமும் - கல்பஸூத்ரங்களையும்
சொல் - வியாகரண சாஸ்த்ரத்தையும்
பொருள் தானும் - மீமாம்ஸா சாஸ்த்ரத்தையும்
நிலைகளும் - அவரவர்க்கு உரிய ஸ்தானங்களையும்

விளக்க உரை

“கலைகள்” என்கிற சொல் பொதுவாக சாஸ்திரங்களை யெல்லாம் சொல்லுமாயினும், இவ்விடத்தில் பிரகரணபலத்தால் வேதாந்தபாகத்தைச் சொல்லுகிறது. வேதம் என்ற சொல் - கர்மகாண்டமும் ப்ரஹ்மகாண்டமுமாகிய உபயபாகத்திற்கும் பொதுவான சொல்லாயினும் இங்கே கர்மகாண்டத்தளவிலே நிற்கிறது, கலைகள் என்பதற்கு ப்ரஹ்மகாண்டத்தைப் பொருளாகக் கொண்டதனால். நீதிநூல்--இதிஹாஸங்களெல்லாம் நீதியையுணர்த்தும் நூல்களாம். கற்பம்--வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை அநுஷ்டிக்க வேண்டிய முறைமைகளையுணர்த்தும் நூல் கல்பஸூத்ரமெனப்படும். சொல்--‘இது சுத்தமான சொல், இது அசுத்தமான சொல்’ என்று அறிவதற்கு உறுப்பான வியாகரண சாஸ்த்ரம். பொருள்--வேதங்களின் உண்மைப்பொருளை நன்கு விசாரித்து உணர்த்தும் நூலாகிய மீமாம்ஸை. ஆகிய இப்படிப்பட்ட சாஸ்த்ரங்களை யெல்லாம் தானான தன்மையினாலும் முனிவர்களை அநுப்ரவேசித்த தன்மையினாலும் வெளியிட்டவன் எம்பெருமானேயாவன்.

English Translation

The Vedas, the Vedanias, ltihasas, kalpasutras, Vyakarana, Mimamsa,, these and other sacred texts were given to the gods and men with grace, by the Lord who has mountain-like arms that bear the conch and discus, a gem radiant chest with lotus dome Lakshmi and the dark hue of the deep ocean. Seeing this form, who could this be, I wondered. “I am the Lord of Attabuyakaram!” he said.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்