விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஓதிலும் உன் பேர் அன்றி மற்றுஓதாள்*  உருகும்நின் திருஉரு நினைந்து* 
  காதன்மை பெரிது கையறவு உடையள்*  கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்* 
  பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது*  தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்* 
  ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!          

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஓதிலும் - (இம்மகள்) வாய்விட்டு எதைச் சொன்னாலும்
உன் பேர் அன்றி - உனது திருநாமம் தவிர
மற்று - வேறொன்றையும்
ஓதாள் - சொல்லுகின்றிலள்;
நின் திருஉரு நினைந்து உருகும் - உனது திருமேனியைச் சிந்தித்து உருகினபடியே யிராநின்றாள்;

விளக்க உரை

ஏதலர்முன்னா = ஏதலரென்று சத்துரக்களுக்குப் பெயர்; ஆழ்வார்க்கு சத்துருக்கள் இங்கு ஆரென்னில்; ‘எம்பெருமானேஉபாயம்’ என்கிற தம்முடைய அத்யவஸா யத்திற்கு எதிர்த்தடையாக ‘கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களே அவனைப் பெறுவதற்கு ஸாதநம்’ என்று கொண்டிருக்கிற உபாயாந்தரநிஷ்டர்களை இங்கு ஏதலரென்கிறது ‘நம்முடைய முயற்சியால் நாம் பேறுபெற வேண்டியிருக்க அவனே உபாயமென்று மார்விலே கைவைத் துறங்கு வதும் ஒரு சாஸ்த்ரார்த்தமாகுமோ?’ என்றிருக்கும் ஸித்தோபாய விரோதிகளின் முன்னே என்னுடைய உறுதியைச் சிறப்பித்து எனக்கு உதவப்போகிறாயோ, அன்றி அவர்களுடைய கொள்கையை ஆதரித்து என்னை உதறிவிடப் போகிறாயோ என்று ஆழ்வார் வினவுகின்றாயிற்று.

English Translation

If ever she speaks a word, it is only your name, if she melts it is only for your form. Her love swells above her, she looks like a one ho’s lost, her large fish-like eyes have found no sleep. O my frail and slender one, -- trailing like a creeper, exceedingly disturbed,- is whimsical. Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்