விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பெண்ணாகி இன்அமுதம் வஞ்சித்தானை*  பிரைஎயிற்று அன்றுஅடல்அரியாய்ப் பெருகினானை* 
  தண்ணார்ந்த  வார்புனல்சூழ் மெய்யம்என்னும்*  தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி* 
  எண்ணானை எண்இறந்த புகழினானை*  இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானைக்*
  கண்ணாரக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இன் அமுதம் வஞ்சித்தானை - இனிய அமிருத்தை (அசுரர்கள் புஜிக்கவொண்ணாதபடி) வஞ்சித்தவனும்
அன்று - முன்பொரு காலத்தில்
பிறை எயிறு - சந்திரனை யொத்த பற்களையுடைய
அடல் அரிஆய் - பலசாலியான நரஸிம்ஹமுர்த்தியாய்
பெருகினானை, - வளர்ந்தவனும்,

விளக்க உரை

உரை:1

எண்ணானை என்பதற்கு - எண்ணுகிறவன் என்றும், எண்ணப்படுகிறவன் என்றும், எண்ணாதவன் என்றும் மூன்று வகையாகப் பொருள் கொள்ளலாம்;- எண்ணுகிறவன் என்னும் பொருளில், நம்போன்ற ஸம்ஸாரிகளைக் காத்தருளும் வகையை எண்ணிக்கொண்டிருப்பவன் என்றதாகிறது; எண்ணப்படுகிறவன் என்னும் பொருளில், “நலமந்தமில்லதோர் நாட்டிலே நித்யஸூரிகள் பணியுமாறு இருக்கவேண்டிய பெருமான்; இப்படி ஸம்ஸாரிகளின் நடுவே வந்து கிடப்பதே!, இஃது என்ன நீர்மை!” என்று பக்தர்களால் எண்ணப்படுமவன் என்றதாகிறது; எண்ணாதவன் என்னும் பொருளில், நமது குற்றங் குறைகளை ஒரு பொருளாக இட்டெண்ணாதவன் என்றதாகிறது.

உரை:2

பெண் வடிவெடுத்து இனிய அமுதத்தை அசுரர்கள் பொறாதவாறு வஞ்சித்தவன்; பிறைமதி போன்ற பற்களுடன், வலிமை கொண்ட நரசிம்மமாக வளர்ந்தவன். நீர்வளம் உள்ள திருமெய்யம் என்னும் மலையில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவன். எல்லோராலும் எண்ணப்படும் அளவற்ற புகழ் உடையவன்; ஒளிமிகுந்த தாமரைப் பூப்போன்ற கண்களை உடைய இப்பெருமாளை நான் கடல்மல்லையில் தலசயனத்தில் கண்டேன். 

English Translation

He came disguised as a female and denied ambrosia to the Asuras. He came as a crescent-teeth feline. He is the Lord reclining on a hooded serpent amid cool waters in Meyyam. He is the Lord of countless virtues with radiant lotus like eyes. To my heart’s content, amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்