விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்*  வேட்கையினோடு சென்று இழிந்த* 
  கான் அமர் வேழம் கைஎடுத்து அலற*  கரா அதன் காலினைக் கதுவ* 
  ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து*  சென்று நின்று ஆழிதொட்டானை* 
  தேன் அமர் சோலை மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மீன் அமர்பொய்கை - மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே
நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு - புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு
சென்று இழிந்த - போய் இறங்கின
கான் அமர் வேழம் - காட்டில் திரியும் கஜேந்திரன்
கை எடுத்து அலற - தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக

விளக்க உரை

இங்கு “ஆனையின் துயரம்” என்றது உயிர்போகிறதேயென்ற துயரத்தை யன்று; வருந்திப் பறித்த இத்தாமரை மலர்களைச் செவ்வியழியாமல் எம்பெருமானது திருவடியிற் சாத்தப் பெறுகின்றிலோமே என்ற துயரத்தையாம். “ஆழி விட்டானை” என்னாது “ஆழி தொட்டானை” என்றது காரியத்தின் லாகவத்தைத் தெரிவித்தவாறு.

English Translation

Desirous of plucking fresh lotus flower for worship, the wild elephant-devotee entered the fish-pond, then raised his trunk and sent out a tumultuous bellow when his leg fell into the jaws of a crocodile. To rid the elephant of his distress the Lord rode his Garuda, arrived on the scene and wielded his discus. He lives in mansioned Mayilai amid nectar-dripping groves. I have seen Him in Tiruvallikkeni.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்