விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்*  நல் புவிதனக்கு இறைவன்* 
  தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை*  மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை*
  பஞ்ச பாண்டவர்க்கு ஆகி*  வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை*
  எந்தை தந்தை தம்மானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இன் துணை - தனக்கினிய துணையான
பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன் - தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு இன்பனும்
நல் புவி தனக்கு இறைவன் - ஸ்ரீபூமிப் பிராட்டிக்கு நாதனும்
தன் துணை - தன்னையே துணையாகவுடையளான
ஆயர்பாவை நப்பின்னை தனக்கு இறை - ஆயர்மகளான நப்பின்னைப் பிராட்டிக்கு நாயகனும்

விளக்க உரை

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்கிற திவ்ய மஹிஷிகள் மூவர்க்கும், 1. “தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்” 2. “பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்யத்துவரையென்னுமதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்கிறபடியே மற்றும் பல தேவிமார்களுக்கும் நாயகனென்கிறது முன்னடிகளில். பத்மம் என்ற வடசொல் பதுமமெனத் திரிந்தது. பதுமத்தலர்-தாமரைப்பூ; அதன் மகள்-ஸ்ரீமஹாலக்ஷ்மி. எம்பெருமான் தேவசரீரத்தையோ மநுஷ்யசரீரத்தையோ மற்றும் எந்த சரீரத்தைப் பரிகரஹிக்கிறானோ அந்தந்த சரீரங்களுக்குத் தகுதியாகப் பிராட்டிதானும் உடலெடுத்து உடன்கூடுகிறா ளென்று சாஸ்த்ரமாதலால் ‘இன் துணை’ என்று பிராட்டிக்கு விசேஷணமிடப்பட்டது.

English Translation

Sweet companion to his beloved lotus dame Lakshmi, Lord of Dame Earth, Lord to his companion cowherd-dame Nappinnai, and a bad companion to others, he went as a messenger for the five Pandavas and spoke in their behalf. He is my companion and master, my father’s father. I have seen Him in Tiruvallikkeni.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்