விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தெரியேன் பாலகனாய்*  பல தீமைகள் செய்துமிட்டேன்* 
  பெரியேன் ஆயினபின்*  பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*
  கரி சேர் பூம் பொழில் சூழ்*  கன மா மலை வேங்கடவா!*
  அரியே! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கரி சேர் - யானைகள் மிகுந்திருக்கப் பெற்றதும்
பூ பொழில் சூழ் - அழகிய சோலைகளாலே சூழப்பட்டும்
கனம் மா மலை வேங்கடவா - திண்ணியதாயு மிருக்கிற திருமலையிலே வாழ்பவனே!
அரியே - ஹரியே!
பாலகன் ஆய் - சிறியேனாயிருந்தபோது

விளக்க உரை

முதலடியை இரண்டு வாக்கியமாகவும் உரைக்கலாம்; பாலகனாய் தெரியேன்-சில நாள் மிக்க இளம்பருவமாய் யுக்தாயுக்தங்க ளறியாதே கிடந்தேன். பல தீமைகள் செய்துமிட்டேன்-(சிறிது அறிவு உண்டான பின்பு) தோன்றினபடி பல தீமைகள் செய்து திரிந்தேன் என்கை. அரியே! -ஹரி என்ற வடசொல் அரியெனத் திரிந்தது. என்னுடைய பாவங்களை யெல்லாம் ஹரிப்பவனே! என்றும், சிங்கம்போல் ஒருவராலும் அடர்க்க வொண்ணாதவனே! என்றும் உரைக்கலாம். (ஹரி—சிங்கம்)

English Translation

Even as a lad, unknowingly, I did many wicked things, when I grew up, I can after others and lost myself. O Lord of elephant-roaming-groves Tiruvenkatam hills, my Master! I have come to you. Pray take me into your service!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்