விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  போர் ஒக்கப் பண்ணி*   இப் பூமிப்பொறை தீர்ப்பான்* 
  தேர் ஒக்க ஊர்ந்தாய்!*  செழுந்தார் விசயற்காய்* 
  கார் ஒக்கு மேனிக்*  கரும் பெருங் கண்ணனே!* 
  ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ* 
   ஆயர்கள் போரேறே!  அச்சோ அச்சோ 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இ பூமி - இந்தப் பூமியினுடைய;
பொறை - பாசத்தை;
தீர்ப்பான் - தீர்ப்பதற்காக;
போர் - யுத்தத்தை;
ஒக்க - (துர்யோதநாதிகளோடு) ஸமமாக;
பண்ணி - செய்து;

விளக்க உரை

துர்யோதனாதிகளுக்குப் பதினொரு அக்ஷௌஹிணிகேனையும் பாண்டவர்களுக்கு ஏழு அக்ஷௌஹிணி சேனையுமாயிருக்கவும் இவ்விருதிற்டதாரும் போர்செய்யும்போது இருவரும் சரிசமமாகவே யுத்தஞ் செய்பவர்களாகவே நிற்குமாறு செய்தனன் கண்ணபிரானென்க. பகைவர்களோடு போர்புரியும் போது தும்பைப்பூமாலையும் வெற்றிகொண்டபோது வாகைப்பூமாலையும் வீரர் சூடுவரெனக் கூறுதல் தமிழர் வழக்கமாதலால் இவ்விரு பூமாலையையும் அவ்வப்போது அர்ஜுநன் அணிவனென்பதைத் தெரிவிக்க பொதுவாகச் ‘செழுந்தார்விசயன்’ என்றார். விசயன் - அர்ஜுனனுக்கு ‘விஜயன்’ என்று வடமொழி நாமம்.

English Translation

O Dark cloud-hued Lord! You drove the chariot for the victory of garlanded Arjuna in a fierce battle and the world of its burden of despot kings! O Fierce Bull of the cowherd clan, come and caress me, Acho, Acho!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்