திவ்யதேச பாசுரங்கள்
-
688.
வித்துவக்கோடு என்பதற்கு - வித்வான்கள் கூடிய இடம் என்று காரணப் பொருள் கூறுவர். பிள்ளைப் பெருமாளையங்கார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் “ திருவிற்றுவக்கோடு சேர்ந்தார் பிறவி கருவிற்றுவக் கோடுங்காண் “ என்றிருப்பதனால், வித்துவக் கோடு அல்ல; விற்றுவக்கோடு என்பர் சிலர். அவ்விடத்திலும் “ திருவித்துவக்கோடு “ என்றே பாடமென்பர் பெரியோர்: இவ்வளவால் எதுகையின்பம் குன்றாது இத்திருமொழியின் ஈற்றுப் பாசுரத்திலும் இங்ஙனமே பாடமாம். இத்திவ்யதேசம் மலைநாட்டில் “ திருமிற்றக் கோடு “ என வழங்கப் படுகின்றது.
நீயே எனக்கு ஸர்வவிதாக்ஷகன் என்று நான் துணிந்த பின்பு, நீ எனக்கு எவ்வளவு துன்பங்களை இவ்விபூதியிலே தந்தருளினாலும் அவற்றையெல்லாம் நான் நன்மையாகவே கருதி மிக்க நன்றியறிவு பாராட்டி மேன்மேலும் அன்பு செய்து வருவேனேயன்றி உன்னைச் சிறிதும் குறை கூறமாட்டேன் என்பதை உபமாநத்தால் விளக்கினார்.
யாவனொருவன் எம்பெருமானிடத்திலே அன்பைச் செலுத்தி அதனால் ஐச்வர்யத்தை உபேக்ஷிக்கிறானோ, அவன் உபேக்ஷிக்க உபேக்ஷிக்க அவனது நல்வினைப்பயனால் அச்செல்வம் அவனை விடாது விரும்பி வலியத் தொடர்ந்து சேர்தல் இயல்பு. (அபேக்ஷிப்பவனுக்குக் கிடையாதொழிதலும், அபேக்ஷியாதவனுக்கு வலிவிலே கிடைத்தலும் பகவத் ஸங்கல்ப மஹிமையென்பது இங்கு அறியத்தக்கது). அது போலவே, நீ உன் உடைமையாகிய என்னை உபேக்ஷிக்க உபேக்ஷிக்க நான் உன்னையே விடாது நிற்பேன் என்றவாறு. அடியார்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்கி எங்களைக் காப்பதற்காகவே கையுந் திருவாழியுமாக இங்கே வந்துள்ளாய் நீ என்பது மூன்றாமடியின் உட்கருத்து. இப்பாட்டு விஷயத்தில் வேதாந்த தேசிகனுடைய கருத்து - செல்வத்தை வெறுத்து எம்பெருமானையே வேண்டி நிற்பவனுக்கு அச்செல்வம் தானே வந்து சேர்தல் பொருந்தாதாதலால், இப்பாட்டில் அங்ஙனம் கூறியுள்ளதை, முன்பு நெடுங்காலம் ஐச்வர்யத்துக்காக உபாஸகை பண்ணி அது பெறாமல் அதனை வெறுத்து எம்பெருமான் பக்கல் அன்பு பூண்ட ஒரு அதிகாரி விஷயமாகக் கொள்ளுதல் நலம் என்பதாம். செல்வம் என்பதற்கு ”மோக்ஷலக்ஷ்மி ” என்றுரைப்பாரும் உளர்.
விளக்கம் 

689.
விளக்கம் 

690.
விளக்கம் 

691.
விளக்கம் 

692.
விளக்கம் 

693.
விளக்கம் 

694.
விளக்கம் 

695.
விளக்கம் 

696.
விளக்கம் 

697.
விளக்கம் 
