திவ்யதேச பாசுரங்கள்

    175.   
    ஒன்றே உரைப்பான்*  ஒரு சொல்லே சொல்லுவான்* 
    துன்று முடியான்*  துரியோதனன் பக்கல்*
    சென்று அங்குப் பாரதம்*  கையெறிந்தானுக்குக்* 
    கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா 
    கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.

        விளக்கம்  


    • முதலடியிற் குறித்த அடைமொழிகள் இரண்டையும் எம்பெருமானுக்காக்கி “????? மித்ரபாவேநஸம்ப்ராப்தம் நி த்பஜேயம் கதஞ்சக” என்ற ஒரு அர்த்தத்தையே சொல்லுபவனும், “??? அபயம் ஸர்வபூதேப்யோ கதாம்யேதத் வ்ரதம் மம” என்ற ஒரு சொல்லே சொல்லுபவனுமாகிய என்று உரைத்து, ‘கையெறிந்தானுக்கு‘ என்பனோடு கூட்டி உரைத்தலு மொக்கும். கையெறிதல் – கையடித்தல். இது பிரமாணம் செய்யும் வகையிலொன்று. இங்கு சென்று – துர்யோதநனிடம் தூதுபோய், (அவன் ஒன்றுங் கொடுக்க இசையாததனால்), அங்கு – பாரதயுத்தத்தில், கை யெறிந்தானுக்கு – ஸேனையை வகுத்துக் கொண்டு யுத்தம் செய்தவனுக்கு என்றும் பொருள் கொள்ளலாம்.


    188.   
    குடங்கள் எடுத்து ஏற விட்டுக்*  கூத்தாட வல்ல எம் கோவே!* 
    மடம் கொள் மதிமுகத்தாரை*  மால்செய வல்ல என் மைந்தா!* 
    இடந்திட்டு இரணியன் நெஞ்சை*  இரு பிளவு ஆக முன் கீண்டாய்!* 
    குடந்தைக் கிடந்த எம் கோவே!*  குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.

        விளக்கம்  


    • உரை:1

      நரஸிம்ஹாவதாரம் முதலிய மற்றுமுள்ள விபவாவதாரங்கள் செய்தவனும் திருக்குடந்தை முதலிய திவ்ய தேசங்களில் வாழ்பவனும் இக்கண்ணபிரானே யென்பது இதில் விளங்கும். குடக்கூத்து - ப்ராஹ்மணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாக அவர்களாடுவதொரு கூத்து; இதனைத் தலையிலே அடுக்குங் குடமிருக்க இருதோள்களிலும் இருகுடங்களிருக்க இருகையிலுங் குடங்களை யேந்தி ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து என்பர்; இதனைப் பதினோராடலிலொன்றெனறும் அறுவகைக் கூத்திலொன்றென்றுங் கூறி “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலலனுக் கடைக்குப வைந்துறுப்பாய்ந்து” என்றுமேற்கோளுங்காட்டினர் சிலப்பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார்.

      உரை:2

      சந்திரன் போன்ற முகமுள்ள பெண்களை மயங்கச் செய்வதில் கண்ணன் வல்லவன்  என்று பொருள்பட பெரியாழ்வார் யசோதையின் நிலையிலிருந்து பாடுகிறார்.


    2037.   
    மூவரில் முதல்வன்ஆய*  ஒருவனை உலகம் கொண்ட,* 
    கோவினை குடந்தை மேய*  குருமணித் திரளை,*  இன்பப்-
    பாவினை பச்சைத் தேனை*  பைம்பொன்னை அமரர் சென்னிப்- 
    பூவினைப்,*  புகழும் தொண்டர்*  என்சொல்லிப் புகழ்வர் தாமே?  

        விளக்கம்  


    • இன்பப் பாவினை – ”அந்தமிழினின்பப் பாவினை” என்றார் குலசேகரப் பெருமாளும். அருளிச் செயல்போலே செவிக்குத் தித்திப்பவன் எம்பெருமான் என்றவாறு. பச்சைத் தேனை – செவிக்குமாத்திரமன்றியே நாவுக்கும் இனியனா யிருப்பவன்; நாள்பட்ட தேன் போலல்லாமல் அப்போதுண்டான தேன்போலே பரமபோக்யன். பைம்பொன்னை – உடம்புக்கு அணையலாம்படி விரும்பத்தக்கவனென்க. அமரர் சென்னிப்பூவினை-நித்யஸூரிகள் தலைமேற் புனைந்து கொண்டாடும் தத்துவம். ”எம்மாவீட்டுத் திறமும் செப்பம், நின்செம்மா பாதபற்புத் தலைசேர்த்து ........ அம்மா வடியேன் வேண்டுவதே” என்று நாமெல்லாரும் பிரார்த்தித்துப் பெறவேண்டிய பேறு சிலர்க்குக் கைவந்திருக்கின்றதே யென்று தலைசீய்க்கிறார். ஆக இப்படிப்பட்ட எம்பெருமானைப் புகழ்கின்ற தொண்டர்கள் என்சொல்லிப் புகழ்வரென்கிறார். இத்தால், தாம் பாசுரம் பேசுவதும் எம்பெருமானுடைய பெருமையின் எல்லையைக்கண்டன்று; போதுபோக்க வேண்டியத்தனை என்றதாம்.


    2045.   
    காவியை வென்ற கண்ணார்*  கலவியே கருதி,*  நாளும்- 
    பாவியேன்ஆக எண்ணி*  அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்,*
    தூவிசேர் அன்னம் மன்னும்*  சூழ்புனல் குடந்தையானைப்,* 
    பாவியேன் பாவியாது*  பாவியேன் ஆயினேனே!

        விளக்கம்  


    • “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்டவப்பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!“ என்று ஈடுபடவேண்டிய திருக்கண்களை விட்டொழிந்து, பிளிச்சைக் கண்ணிகளையெல்லாம் காவியைவென்ற கண்ணாராக ப்ரமித்து அவர்களோடு கூடிவாழ்வதே பரமபுருஷார்த்தமென்று கருதி, ஸுக்ருதலேசமும் பண்ணாத மஹாபாபியாவதற்கே வழிதேடி, (தசரதசக்ரவர்த்தி வெண்கொற்றக்குடை நிழலிலே பழுத்தாற்போலவும், நம்மாழ்வார் “உனது பாலேபோற் சீரில் பழுத்தொழி்ந்தேன்“ என்று பகவத் குணங்களிலேயே பழுத்தாற்போலவும்) அந்தப் பாவங்களிலேயே பழுத்தொழிந்தேன் நான் பரமபோக்யமான திருக்குடந்தைமா நகரிலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற ஆராவமுதாழ் வாரைச் சிறிதாகிலும் நெஞ்சில் நினைத்திருந்தேனாகில் பாவங்கள் தொலையப் பெற்றிருப்பேன். அது செய்யாமையன்றோ படுபாவியானேனென்றாராயிற்று. தூவிசேரன்ன மன்னுங் குடந்தை = ஞானம் அனுட்டானம் ஆகிய இரண்டு சிறகுகளமைந்த ‘ஹம்ஸர்‘ என்னும்படியான மஹான்கள் வாழுமிடமென்று ஸ்வாதேசார்த்தங் கூறுவர்.


    2080.   
    அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை* அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை* 
    குன்றாத வலி அரக்கர் கோனை மாள* கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து -
    வென்றானை* குன்று எடுத்த தோளினானை* விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்- 
    நின்றானை* தண் குடந்தைக் கிடந்த மாலை* நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே (2)

        விளக்கம்  


    • கீழ்ப்பாட்டில் ப்ரணயரோஷந் தலையெடுத்து ஒரு நிலை நின்றார்; அதாவது ‘எம்பெருமான் வந்தவாறே அவனுக்கு ஏதொவொரு சிஷை செய்து தாம் முடிந்துபிழைப்பதாகப் பேசினார். அவன் வந்தாலன்றோ அது செய்யலாவது; வரக்காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார். விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார். நம்மாழ்வார்க்கு * முனியேநான் முகனே யென்கிற திருவாய்மொழி போலே யிருக்கிறதாயிற்று இவர்க்கு இப்பாசுரம். அன்று ஆயர்குலமகளுக்கு அரையன்றன்னை = தம்மோடொத்த திவ்ய மஹிஷிகளுக்கு உதவினபடியைப் பேசத்தொடங்கி முந்துறமுன்னம் நப்பின்னைப் பிராட்டிக்கு உதவினபடியைப் பேசுகிறார். ‘அரையன்‘ என்பது ‘அரசன்‘ என்ற பதத்தின் போலி. நப்பின்னையின் துயரத்தைத் தொலைத்த பிரபு என்றபடி. அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் கன்னை = கடலைக் கடைந்ததும் கடலில் அணைகட்டினதும் பிராட்டிக்காக. பிராட்டியைப் பெறுவதற்காகக் கடலைக்கடைந்தது; அவளுடைய தனிமையைத் தீர்க்கைக்காகக் கடலையடைத்தது. தேவர்கட்கு அமுதங்கொடுப்பதற்காகவன்றோ கடல் கடைந்த தென்னில்; அன்று; பிராட்டியைப் பெறுதலே முக்கிய மான பலன்; மற்றது ஆநுஷங்கிகம் என்க. “விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே!“ என்றாரே இவர்தாமே. (குன்றாத வலியரக்கர் இத்யாதி) வரபலத்தையும் புஜபலத்தையும் பற்றாசாகக் கொண்டு பரஹிம்ஸையே போதுபோக்காயிருக்கும் ராக்ஷஸஜாதிக்கெல்லாம் தலைவனாயிருந்த இராவணன் தொலையும்படியாக ஸ்ரீசாரங்கவில்லிலே அம்புகளைத் தொடுத்து நடத்தி வெற்றி பெற்ற வீறுயுடைமை சொல்லுகிறது. ராக்ஷஸகுலத்தவரான விபீஷணாழ்வான் வாழ்ந்து போயிருக்க, ‘குலம் களைந்து‘ என்னலாமோ வென்னில்; அவர், தம்முடைய நினைவாலும் இராவணனுடைய நினைவாலும் சக்ரவர்த்தித் திருமகனாருடைய நினைவாலும் ராக்ஷஸ குலத்தில் நின்றும் பிறிகதிர்ப்பட்டு இக்ஷ்வாகு குலத்திற்புகுந்து விட்டாரென்பது வான் மீகி முதலிய முன்னோர்களின் ஸித்தாந்தம். இது ஸ்ரீவசநபூஷணாதிகளில் விரியும். இராவணனொருவனே குற்றமியற்றினவனாயினும் அவனுடைய ஸம்ஸர்க்கமே ஹேதுவாகக் குலங்குலமாக நசித்தொழிந்தது. “கேசவன் தமர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும், மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா“ என்கிறபடியே ஒருவன் அநுகூலனானால் அவனுடைய ஸம்பந்தி ஸம்பந்திகளும் உஜ்ஜீவிக்குமாபோலே ஒருவன் பிரதிகூலனான இராவணனுடைய ஸம்ந்தத்தாலே ராக்ஷஸகுலமடங்கலும் பாழ்பட்டன; அது கூலனான ஸுக்ரீவனுடைய ஸம்பந்தத்தாலே வாநரஜாதியடங்கலும் வாழ்ச்சி பெற்றன. குன்றெடுத்த தோளினானை = ஆயர்க்கு நேர்ந்த ஆபத்தைப் போக்கினது ஒரு பெருமையோ? என்னுடைய ஆபத்தைப் போக்கவேண்டாவோ வென்பது இங்கு உள்ளுறை. விரிதிரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை = கீழ்ச்சொன்ன விபவாதாரங்களுக்குப் பிற்பட்டவர்களையும் அநுக்ரஹிக்கைக்காகவன்றோ திருவிண்ணகரிலே நித்ய வாஸம் பண்ணுகிறது. திருவிண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி என்றும், உப்பிலியப்பன் ஸந்நிதி என்றும் வழங்கப்பெறும். சோழநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. திருவிண்ணகரிலே நின்றான், திருக்குடந்தையிலே கிடந்தான்; நின்றால் எங்கேனும் புறப்பட்டுப்போக நினைவுண்டு போலும் என்று நினைக்கும்படியாயிருக்கும்; பள்ளிகொண்டிருந்தால் அங்ஙனே நினைப்பாரில்லையே: ‘ஸம்ஸாரம் கிழங்கெடுத்தாலல்லது போகோம்‘ என்றுகிடக்கிற கிடையாயிற்று. (மாலை) “மாயாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை“ என்கிறபடியே தானும் வ்யாமோஹசாலியாய் அடியார்களையும் வ்யாமோஹசாலி களாக ஆக்குமவன் என்க. (நெடியானை) இப்படிப்பட்டவன் இப்போது எனக்கு எட்டாதவனாயினானென்று காட்டுகிறபடி. அடிநாயேன் நினைந்திட்டேனே = அவனுடைய மேன்மைக்கு எல்லையில்லாதாப்போலே என்னுடைய தாழ்வுக்கும் எல்லையில்லை; திறந்த வாசலெல்லாம் நுழைந்து திரியும் ஐந்து போலே மிகத் தண்ணியன். இப்படிப்பட்ட நான் அப்படிப்பட்ட பரமபுருஷனை நினைந்திட்டேன் – அம்மானாழிப் பிரானவன் எவ்விடத்தான் யானார், எம்மாபாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்குங்கண்டீர்‘ என்றாப்போலே, மிக நீசனான அடியேனுக்கும் விதி வசத்தாலே நேர்ந்த இக்கலவி நித்யமாய்ச் செல்லவேணுமென்று நினைந்திட்டே னென்றவாறு.


    807.   
    இலங்கை மன்னன் ஐந்தொடுஐந்து*  பைந்தலை நிலத்துக,* 
    கலங்க அன்று சென்றுகொன்று*  வென்றிகொண்ட வீரனே,*
    விலங்குநூலர் வேதநாவர்*  நீதியான கேள்வியார்,* 
    வலங்கொளக் குடந்தையுள்*  கிடந்தமாலும் அல்லையே? 

        விளக்கம்  


    • இப்பாட்டுமுதல் மேல் ஆறு பரசுரங்களாலே, திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகிற படியை அநுபவிக்கிறார்.


    808.   
    சங்குதங்கு முன் கை நங்கை*  கொங்கைதங்கல் உற்றவன்,* 
    அங்கம்மங்க அன்றுசென்று*  அடர்த்துஎறிந்த ஆழியான்,*
    கொங்குதங்கு வார்குழல்*  மடந்தைமார் குடைந்தநீர்,* 
    பொங்குதண் குடந்தையுள்*  கிடந்த புண்டரீகனே!   

        விளக்கம்  


    • “கொங்கைதங்கு வார்குழல் மடந்தைமார்” என்றது லௌகிக ஸ்த்ரீகளையல்ல; “ம.தி.மு.க. மடந்தைய ரேந்தினர்வந்தே” என்று ஆழ்வாரருளிச் செய்தபடி பரமபதத்திலே எதிர்கொண்டழைக்கு மலர்களான திவ்யஸுந்தரிகளைச் சொல்லுகிறது.


    809.   
    மரம்கெட நடந்துஅடர்த்து*  மத்தயானை மத்தகத்து,* 
    உரம்கெடப் புடைத்து*  ஒர் கொம்புஒசித்து உகந்த உத்தமா,*
    துரங்கம்வாய் பிளந்து*  மண்அளந்தபாத,*  வேதியர்- 
    வரம்கொளக் குடந்தையுள்*  கிடந்தமாலும் அல்லையே?

        விளக்கம்  



    810.   
    சாலிவேலி தண்வயல்*  தடங்கிடங்கு பூம்பொழில்,* 
    கோலமாடம் நீடு*  தண் குடந்தை மேய கோவலா,*
    காலநேமி வக்கரன்*  கரன்முரன் சிரம் அவை,* 
    காலனோடு கூட*  விற்குனித்த வில்கை வீரனே!    

        விளக்கம்  


    • காலநேமி யென்பவன் இராவணனுடைய மாதுலன்; இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன், வக்கரன் - தந்தவக்ரன்; தத்துவக்த்ரன் என்று சொல்வதுமுண்டு. கண்ணபிரான் ருக்மிணிப்பிராட்டியை ஸ்வீகரித்தருளினபோது எதிர்த்து வந்து போர்செய்த அரசர்களில் இவனொருவன், முரண் = நரகாசுரனுடைய மந்திரி. கரன் என்று ஒரு ராக்ஷணுண்டாகிலும் அவன் இங்கே விவக்ஷிதனல்லன்; அவன் ராமாவதாரத்தில் கொல்லப்பட்டவன்; இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சரிதங்கள் அநுஸந்திக்கப்படுவதால் கரன் என்பது முரனுக்கு அடைமொழியாயிற்று. *** என்ற வடசொல் க்ரூரனென்ற பொருளையுமுடையது. “சிரமவை காலனோடுகூட” என்றவிடத்து “அறுத்து” என்றொரு வினையெச்சத்தை வருவித்துக்கொண்டு உரைத்ததுமொன்று.


    812.   
    நடந்தகால்கள் நொந்தவோ*  நடுங்க ஞாலம் ஏனமாய்,* 
    இடந்த மெய் குலுங்கவோ?*  இலங்கு மால் வரைச்சுரம்*
    கடந்த கால் பரந்த*  காவிரிக் கரைக் குடந்தையுள்,* 
    கிடந்தவாறு எழுந்திருந்து பேசு*  வாழி கேசனே!  (2)

        விளக்கம்  


    • இப்படி ஆரவாமுதாழ்வார் திருவடிகளிலே அநுபவிக்க இழிந்த இவ்வாழ்வாரை நோக்கி அப்பெருமான் வாய்திறந்து ஒரு வார்த்தை யருளிச் செய்யாமலும் கைகோவி அணைத்தருளாமலும் ஏகாகாரமாகக் கண்வளர்ந்தருளக் காண்மையாலே ‘இது அர்ச்சாவதாரஸமாதி’ என்று இவர் திருவுள்ளம் பற்றாமல், ஏதோ அளவற்ற ச்ரமத்தினால் இப்படி திருக்கண் வளர்ந்தருள்கிறாரென்று அதிசங்கை பண்ணி, “வடிவினையில்லா மலர்மகன் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி” என்கிறபடியே பரமஸுகுமாரமான திருவடிகளைக்கொண்டு உலகங்களை அளந்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ? அன்றி, பூமியைப் பாயாகச்சுருட்டி எடுத்துப் போன ஹிரண்யாக்ஷனை மஹா வராஹமூர்த்தியாய்க் சொன்று அப்பூமியைக் கொணர்ந்து பழையபடி விரித்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ இங்ஙனே தேவரீர் ஆடாது அசங்காது திருக்கண்வளர்த்தருள்கிறது?; இதை எனக்குத் தெரியவருளிச் செய்யவேணும் என்கிறார். உலகளந்த ச்ரமமாகில் திருவடிகளைப் பிடிக்கவும் உலகிடந்த ச்ரமமாகில் திருமேனியைப் பிடிக்கவும் பார்க்கிறார்போலும். (விலங்குமால் இத்யாதி.) பல மலைகளையும் பல பாலை நிலங்களையும் கடந்துகொண்டு,பெருமாளுக்கு கீதோபசாரம் பண்ணவேணுமென்னும் அபிநிவேசத்தாலே காவேரி ஓடி வருகின்றானென்க. எழுந்திருந்து போசு = கண் வளர்ந்த***யின் காரணத்தை சயனித்துக் கொண்டே அருளிச் செய்யலாகாது; என்னுடைய அச்சம் தீரும்படி எழுந்திருந்து அருளிச்செய்யவேணும் என்கிறார். எழுந்திருக்கும்போது உண்டாகக்கூடிய சேஷ்டிதங்களைக் காணவும் அருளிச்செய்யும்போதை ஸ்வரத்தைக்கேட்கவு>ம் விரும்புகிறபடி.


    628.   
    பால் ஆலிலையில் துயில் கொண்ட*  பரமன் வலைப்பட்டு இருந்தேனை* 
    வேலால் துன்னம் பெய்தாற் போல்*  வேண்டிற்று எல்லாம் பேசாதே* 
    கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்*  குடந்தைக் கிடந்த குடம் ஆடி* 
    நீலார் தண்ணந் துழாய் கொண்டு*  என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே*     

        விளக்கம்  


    • உரை:1

      தாய்மார்களே! நீங்கள் எனக்கு ஹிதஞ்சொல்வதாக நினைத்துப் பல பேச்சுக்களைப் பேசுகிறீர்கள், எப்படியாவது என்நெஞ்சைக் கண்ணபிரானிடத்தில் நின்றும் மீட்கவேணுமென்று பார்க்கிறீர்கள், நான் அவ்விஷயத்தில் அவகாஹிப்பதற்குமுன்பு நீங்கள் ஹிதஞ்சொல்லியிருந்தால் ஒரு கால் ப்ரயோஜநப்பட்டிருக்கலாம், வெள்ளம் கடந்தபின்பு அணை கட்டுவாரைப்போலே, அவ்விஷயத்திலே நான் அற்றுத் தீர்ந்தபின்பு என்னை நீங்கள் மீட்கப்பார்த்துப் பயனென்? நானோ, “பாலகனென்று பரிபவஞ்செய்யேல் பண்டொருநாள், ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவனிவன்“ என்னும் படியான கண்ணபிரானாகிற வலையிலே சிக்கிக் கொண்டேன், அதில் தப்பநீங்க என்னாலும் முடியாது, உங்களாலும் தப்புவிக்கமுடியாது, இப்படிப்பட்ட நிலைமையில் சொல்வதானது வெறும் பேச்சாயில்லை, வேலாயுதத்தையிட்டுத் துளைக்கிறாப்போல் அத்தனை பாதகமாயிரா நின்றது. இப்போது எனக்கு நீங்கள் உண்மையாக ஏதாவது நன்மைசெய்ய விரும்புதிரேல், ஸௌஸீல்ப ஸௌலப்யாதி குணங்கள் விளங்கநின்ற அக்கண்ணபிரானுடைய ஸம்பந்தம் பெற்றதொரு திருத்துழாய்மலரைக் கொணர்ந்து என் குழலிலே சூட்டுங்கள் அதுவே எனக்குற்ற நன்மையாகும் என்கிறாள்.

      உரை:2

      'சிறு குழந்தையாய் ஆலிலையில் துயில் கொண்ட பரமனின் வலையில் நான் அகப்பட்டுக் கொண்டேன். வேலால் குத்துவதைப் போல் நீங்கள் விரும்பிய வண்ணமெல்லாம் பேசாதீர்கள். கோலினைக் கையில் கொண்டு பசுக்களை மேய்த்து ஆயனாகக் குடக்கூத்து ஆடியவன் திருக்குடந்தையில் பள்ளி கொண்டுள்ளான். அவன் அணிந்த குளிர்ந்த நீல நிற துளசியைக் கொண்டு என் வாசம் வீசும் கூந்தல் மேல் சூட்டுங்கள்'


    2311.   
    சேர்ந்த திருமால்*  கடல்குடந்தை வேங்கடம்* 
    நேர்ந்தஎன் சிந்தை நிறைவிசும்பு,* - வாய்ந்த
    மறைபாடகம் அனந்தன்*  வண்துழாய்க் கண்ணி,*
    இறைபாடி ஆய இவை. 

        விளக்கம்  


    • கீழ்ப்பாசுரங்களில் அநுபவித்த திருக்குணங்களெல்லாம் குறைத்திலிட்ட விளக்குபோலே விளங்கப்பெற்ற இடங்களை எடுத்துப் பேசியனுபவிக்கிறார். திருக்குடந்தை திருவேங்கடம் முதலான திருப்பதிகளோடே கூடத் தம்முடைய சிந்தையும் சேர்த்துக் கணக்கிடுகையாலே, எம்பெருமானுக்கு இவர் தம் சிந்தையோடு மற்ற திருப்பதிகளோடு ஒரு வாசியில்லை என்றாராயிற்று. “வாய்ந்தமறை“ என்று வேதங்களையும் உடன் கூறினது – திருப்பதிகளில் ஸேவை ஸாதிப்பது போலத் தமக்கு வேதங்களிலும் ஸாக்ஷாத்தாக ஸேவைஸாதிக்கும்படியைத் தெரிவித்தவாறாம். இறைபாடி – ராஜதானி.


    2278.   
    எங்கள் பெருமான்*  இமையோர் தலைமகன்! நீ,* 
    செங்கண் நெடு மால் திருமார்பா,*  - பொங்கு-
    பட மூக்கின் ஆயிர வாய்ப்*  பாம்பு அணைமேல் சேர்ந்தாய்,* 
    குடமூக்குக் கோயிலாக் கொண்டு.   

        விளக்கம்  


    • எம்பெருமானே! என்போன்ற அடியார்களை விஷயீ கரிப்பதற்காகவன்றோ திருக்குடந்தையிலே வந்து சாய்ந்தருளா நின்றாய் என்கிறார். ‘கும்பகோணம்‘ என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் குடமூக்கு என்பதாம். (கும்பம் –குடம், கோணம் –மூக்கு) இல் –க்ருஹம்.


    949.   
    ஆவியே! அமுதே! என நினைந்து உருகி*  அவர் அவர் பணை முலை துணையாப்* 
    பாவியேன் உணராது எத்தனை பகலும்*  பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்* 
    தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்*  சூழ் புனல் குடந்தையே தொழுது*  
    என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)  

        விளக்கம்  



    954.   
    இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்*  இன்னது ஓர் தன்மை என்று உணரீர்* 
    கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்*  கண்டவா தொண்டரைப் பாடும்* 
    சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்*  சூழ் புனல் குடந்தையே தொழுமின்* 
    நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்*  நாராயணா என்னும் நாமம். 

        விளக்கம்  



    991.   
    ஊரான் குடந்தை உத்தமன்*  ஒரு கால் இரு கால் சிலை வளையத்* 
    தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்*  வற்றா வரு புனல் சூழ் பேரான்* 
    பேர் ஆயிரம் உடையான்*  பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்* 
    தாரா வயல் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  

        விளக்கம்  



    1975.   
    அறியோமே என்று*  உரைக்கலாமே எமக்கு,*
    வெறியார் பொழில்சூழ்*  வியன்குடந்தை மேவி,*
    சிறியான் ஓர் பிள்ளையாய்*  மெள்ள நடந்திட்டு*
    உறியார் நறுவெண்ணெய்*  உண்டுகந்தார் தம்மையே?

        விளக்கம்  


    • கீழ்ப்பாட்டில் “அன்னே யிவரையறிவன்” என்ற பரகால நாயகியை நோக்கித் தோழியானவள் ‘நங்காய்! இவரை எங்ஙனே அறிந்தாய்? ‘இன்னாரென்றறியேன்’ என்று முன்பு சொன்னாய்; இப்போது அறிவேனென்கிறாய்; பொருந்தாத வார்த்தை யாயிருக்கின்றதே!’ என்ன் இவரை நான் அறிவெனென்பதே உண்மையென்கிறாள். இவரையறியோம் என்று நான் எங்ஙனே சொல்லக்கூடும்? “இங்கே போதுங்கொலோ இனவேல் நெடுங்கண் களிப்பக், கொங்கார்சோலைக் குடத்தைக் கிடந்தமால் இங்கே போதுங்கொலோ” என்று நான் மநோரதித்த படியே வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவியான பெருமானன்றோ எழுந்தருளியிருக்கிறார்; ‘இவன் இதைத் திருடினான்’ என்று சொல்லவொண்ணாதபடியான இளம்பிராயத்தையுடையனாய்ப் பொய்யடியிட்டுப் போய்ப்புக்கு உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ‘ஆச்ரிதருடைய ஹஸ்த ஸ்பர்சமுள்ள த்ரவ்யத்தை உட்கொள்ளப் பெற்றோம்’ என்று உகந்தாப் போலே என்னைத் தழுவியணைத்துத் தலைதடுமாறாகப் பாரிமாறி ஆநந்தத்தின்மேலெல்லையிலே யிருக்கினற இவரை ‘அறியோம்’ என்று எங்ஙனே சொல்லக்கூடு மென்கிறாள்.


    2010.   
    அண்டத்தின் முகடுஅழுந்த*  அலைமுந்நீர்த்  திரைததும்ப ஆ! ஆ! என்று,* 
    தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்*  தான்அருளி,*  உலகம்ஏழும்-
    உண்டுஒத்த திருவயிற்றின்*  அகம்படியில்  வைத்து உம்மை உய்யக்கொண்ட,* 
    கொண்டல்கை மணிவண்ணன்*  தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே.

        விளக்கம்  


    • அண்டபித்தியையும் அளாவிச்சென்று அலையெறிகின்ற மஹா ப்ரளயவெள்ளம் பரந்தவளவிலே ‘ஐயோ! நம்முடைய உலகுக்கு இப்படிப்பட்ட அநா;த்தம் விளைந்திட்டதே!’ என்று திருவுள்ளம் நொந்து ஹாஹாகாரம்பண்ணித் தொண்டர்க்கும் தேவாகட்கும் முனிவாகட்கும் மற்றுமுள்ளார்க்கும் மஹா க்ருபைபண்ணி ஏழுலகங்களையும் திருவயிற்றினுள்ளே வைத்து உஜ்ஜீவிப்பித்தருளின பரமோதாரனாய் நீலமணிவண்ணனான எம்பெருமான் நித்யவாஸம் செய்தருளுமிடமான திருக்குடந்தை நகரைப் பாடி யாடுங்கோளென்கிறார். உண்டு ஒத்த திருவயிறு ஸ்ரீ ஏழுலகங்களையும் உட்கொண்ட வயிறு மிகப் பருத்திருக்க வேணுமே; அப்படியில்லை; உட்கொள்வதற்கு முன்பு எங்ஙனமிருந்ததோ அங்ஙனமேயிருந்தது, (அல்லது) மற்ற அவயவங்களைப் போலவே யிருந்தது என்றவாறு.


    1853.   
    வானை ஆர்அமுதம்*  தந்த வள்ளலை* 
    தேனை நீள்வயல்*  சேறையில் கண்டுபோய்*
    ஆனை வாட்டி அருளும்*  அமரர்தம்-
    கோனை,*  யாம் குடந்தைச்சென்று காண்டுமே.

        விளக்கம்  


    • தன்னை விரும்பாதே பிரயோஜநாந்தரத்தை விரும்பினவர்கட்கும் திருமேனியைப் போணாதே கடல்கடைந்து அமுதளித்த பரமோதாரனைத் திருச்சேறையிலே ஸேவித்தோம், இனித் திருக்குடந்தையிலே ஸேவிப்போமென்கிறார்.


    1078.   
    அன்று ஆயர் குலக் கொடியோடு*  அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*  
    அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு*  உறையும் இடம் ஆவது*
    இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை*  தடம் திகழ் கோவல்நகர்* 
    நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.

        விளக்கம்  


    • மாமலையாவது நீர்மலையே என்ற சொல்தொடரிலுள்ள ‘ ஆவது ‘ என்பதை இடம் என்பதனோடே கூட்டி ‘இடமாவது மாமலை நீர்மலை” என்று உரைப்பர் சிலர்; அங்ஙனம் வேண்டா; உள்ளபடியே அந்வயித்து உரைத்தல் தகும். மாமலை ஆவது - மாமலையான என்றபடி. நீர்மலை = நீரானது அரண்போலச் சூழப்பெற்ற மலையானது பற்றித் திருநீர்மலை யெனப்படும்.


    1949.   
    இங்கே போதும்கொலோ,*
    இனவேல்நெடுங் கண்களிப்ப,*
    கொங்குஆர் சோலைக்*  குடந்தைக் கிடந்தமால்,*
    இங்கே போதும்கொலோ!  (2) 

        விளக்கம்  


    • ஸ்வாமியானவன் அடியானுள்ளவிடத்தே தானே எழுந்தருளிக் கைக்கொள்ளுதல் முறைமையேயன்றி ஸ்வாமியைத் தேடி அடியான் செல்லுதல் இரண்டு தலைக்கும் அவத்யம் என்பது ஸத்ஸம்ப்ரதாயம். அசோகவனத்தில் பிராட்டி பொறுக்க வொண்ணாத துன்பங்களை அநுபவித்து வருந்திக்கிடக்குமளவில் திருவடி சென்று ‘ஸீதே! என்தோளிலே வீற்றிரும்’ ஒரு நொடிப் பொழிதிலே உம்மை இராமபிரான் ஸந்நிதானத்திலேகொண்டு சேர்த்திடுவேன்; என்ன, அதற்குப் பிராட்டி “சரைஸ்து ஸங்குலாம் க்ருத்வால ங்காம் பரபலார்த்தந, மாம் நயேத்யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய ஸத்ருசம் பவேத், என்றாள். சக்ரவர்த்தி திருமகனார் தாமே எழுந்தருளி இலங்கையைப் பொடிபடுத்தி என்னை மீட்டுக்கொண்டு போவாராகில் அதுவன்றோ தகுதி யென்றாள். ஸொத்தைப் பெற்று மகிழவேணுமென்னுமாவல் ஸ்வாமிக்கு இருப்பதே தகுதியாகும். அந்த முறைமைப்படியே இப்பாட்டில் “கொங்கார்சோலைக் குடந்தைக் கிடத்தமால் இங்கே போதுங்கொலோ என்கிறாள். ஏதுக்காக அவர் இங்கு எழுந்தருள வேணுமென்ன, இனவேல் நெடுங்கண்களிப்பு என்கிறாள். கண்ணாரக்காண்பதற்குமேலே வேறொரு ப்ரயோஸனமில்லை யென்றிருப்பாக்ள் முந்துறமுன்னம் காணப்பெற்ற பின்பு அணையவேணுமென்றிருப்பர்கள்; அணையவும் பெற்றால் இதற்கு ஒருகாலும் இடையூறுவாராமே இவ்விருப்பு நித்யமாய்ச் செல்ல வேணுமென்றிருப்பாக்ள். போதும் - போதரும்.


    1759.   
    தோடுஅவிழ் நீலம் மணம் கொடுக்கும்*  சூழ்புனல்சூழ் குடந்தைக் கிடந்த,*
    சேடர்கொல் என்று தெரிக்க மாட்டேன்*  செஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி,*
    பாடக மெல்அடியார் வணங்க*  பல்மணி முத்தொடு இலங்குசோதி,*
    ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்*  அச்சோ ஒருவர் அழகியவா!   

        விளக்கம்  


    • தோழீ! இப்பெரியவர் திருக்குடைந்தையிலே திருக்கண் வளர்ந்தருளுகிற யுவா என்னலாம்படி விளங்குகின்றார்; அவர்தானோ இவர்!, நன்றாகத் தெரியவில்லையே. திருவாழி திருச்சங்குகளைத் திருக்கைகளிலே ஏந்தி யிருக்கின்றார்; இளமகளிர் யௌவந புருஷர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்களாகையாலே இவரும் இளமகளிர்களால் சுற்றி வணங்கப் பட்டிருக்கிறார். அவர்களது உள்ளம் குளிரும்படி முத்து மயமும் பொன் மயமுமான திருவாபரணங்களை அணிந்துகொண்டிருக்கிறார்; அவர்களை உவந்து தழுவுவதற்கு நான்கு திருத்தோள்களையுடையரா யிருக்கிறார்; இவருடைய அழகோ நம்மால் பேசப்போகாது, இவர் இன்னாரென்று தெரியவில்லையே தோழீ! என்கிறாள். “செஞ்சுடராழியுஞ் சங்குமேந்தி” என்று தொடங்கிப் பின்னடிகளை முந்துற அந்வயித்துக்கொண்டு பிறகு முன்னடிகளை அந்வயித்துக் கொள்ளவுமாம். திருக்குடைந்தையில் பொய்கைகளெங்கும் நீலமலர்கள் மணங்கமழ்கின்றன வென்பது முதலடியிலுள்ள விசேஷணத்தின் கருத்து. சேடர் - இளம்பருவமுள்ளவர்; யுவா என்றபடி. “குடந்தைக் கிடந்த சேடர்கொலென்று தெரிக்கமாட்டேன்” என்றது – இவர் திருக்குடந்தை யெம்பெருமானோ திருநாகையெம்பெருமானோ தெரியவில்லை என்றபடியன்று; முதற்பாட்டிற் கூறியபடியே மஹாராஜன் போலவும் வைதிக ப்ராஹ்மணோத்தமர் போலவும் காட்சிதருகின்ற இவர் அஸாதாரண லக்ஷணங்களாலே ஸாக்ஷாத் ஸ்ரீமந்நாராயணனா யிருக்கவேணும்போல் தெரிகிறது; பாவிகளான நமக்கு எம்பெருமான் ஸேவை ஸாதிக்கும்படியான பாக்கியம் இருக்குமோ என்று நினைக்குங்கால் எம்பெருமானன்றுபோல் தோற்றுகிறது என்பதாகக் கொள்ளலாம்.


    1450.   
    குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட*  தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் 
    விழ*  நனி மலை சிலை வளைவு செய்து*  அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*
    ஆண்டாய் உனைக் காண்பது ஓர்*  அருள் எனக்கு அருளுதியேல்* 
    வேண்டேன் மனைவாழ்க்கையை*  விண்ணகர் மேயவனே.   

        விளக்கம்  


    • குழல் நிறவண்ண – கரிய திருமேனியுடையாய்! என்றபடி. நின்கூறு கொண்ட தழல்நிற வண்ணன் = எம்பெருமானுடைய ஸௌசீல்ய குணத்தைப்பற்றி பேசும்போது தாமஸ தெய்வமான ருத்ரனுக்கும் தனது திருமேனியின் வலப்பக்கத்தில் இடங்கொடுத்து ஆதரிக்குமவனென்று ஆழ்வார்கள் ஈடுபட்டருளிச்செய்வது வழக்கம்; திருவாய்மொழியில் “வலத்தனன் திரிபுரமெரித்தவன்” 1-3-9 என்ற பாசுரத்தின் வியாக்கியானத்தில் “பச்சையகாதசமே ருத்ராந் தக்ஷிணம் பார்ச்வ மாச்ரிதாந்” என்ற மோக்ஷதர்ம வசநத்தை எடுத்துக்காட்டியிருப்பது இங்கே அநுஸந்தேயம்.


    1526.   
    பொங்கு ஏறு நீள் சோதிப்*  பொன் ஆழி தன்னோடும்* 
    சங்கு ஏறு கோலத்*  தடக் கைப் பெருமானை*
    கொங்கு ஏறு சோலைக்*  குடந்தைக் கிடந்தானை* 
    நம் கோனை நாடி*  நறையூரில் கண்டேனே.  (2)

        விளக்கம்  


    • ஆற்றுப் பெருக்குப்போலே மேன்மேலும் மிக்கு வளராநின்ற எல்லையில்லாத தேஜஸ்ஸையுடைய திருவாழியாழ்வானோடுகூட ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானுக்கும் குடியிருப்பான அழகிய திருக்கைகளை யுடையனாய்த் திருக்குடந்தையிற் கண்வளர்ந்தருள்பவனான எம்பெருமானைத் திருநறையூரிலே காணப்பெற்றேன்.


    1538.   
    கிடந்த நம்பி குடந்தை மேவி*  கேழல் ஆய் உலகை 
    இடந்த நம்பி*  எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்*
    கடந்த நம்பி கடி ஆர் இலங்கை*  உலகை ஈர் அடியால்* 
    நடந்த நம்பி நாமம் சொல்லில்*  நமோ நாராயணமே.  

        விளக்கம்  


    • ஒன்பது பாசுரங்களிலும் திருநறையூர்ப் பிரஸ்தாவமே இல்லையாயினும், மேல் திருநாமப்பாட்டில் “நறையூர் நெடுமாலை நாவிற்பரவி நெஞ்சிற்கொண்டு நம்பி நாமத்தை” என்று தலைக்கட்டுவதால் இப்பாசுரங்க ளெல்லாவற்றுக்கும் திருநறையூர் இலக்கு என்பது விளங்கும்.


    1732.   
    வந்தாய் என்மனத்தே*  வந்துநீ புகுந்தபின்னை,* 
    எந்தாய்! போய்அறியாய்*  இதுவே அமையாதோ*
    கொந்துஆர் பைம்பொழில்சூழ்*  குடந்தைக் கிடந்துஉகந்த-
    மைந்தா,*  உன்னைஎன்றும்*  மறவாமை பெற்றேனே. 

        விளக்கம்  


    • தாம் பெற்ற பேற்றை வாயாரச்சொல்லி மகிழ்கிறார். “என்மனத்தே வந்து நீ புகுந்தபின்னை எந்தாய் போயறியாய்” என்று ஒருவாக்கியமாகவே சொல்லிவிடலாமே; முதலில் “வந்தாய்” என்றொன்று தனிப்பட வேண்டாவே என்னலாமாயினும், தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு “எந்தாய்! என்மனத்தே வந்தாய் – நீ வந்து புகுந்தபின்னைப் போயறியாய்” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டிநீட்டி யருளிச்செய்கின்றார். வந்தாய் – பரமபதம் திருப்பாற்கடல் முதலான அஸாதாரண ஸ்தலங்களை விட்டு இவ்விடம் வந்தாய்; என்மனத்தே வந்து நீ புகுந்து பின்னை = வந்த விடத்திலும் ஜ்ஞாநாநுஷ்டாநங்களிற் சிறந்த யோகிகளின் மனத்தைத் தேடியோடாமல் நாயினேனுடைய மனத்தைத் தேடிப்பிடித்து வந்து புகுந்தபின்பு, போயறியாய் = ‘இனிய இடங்களிலே நாம் சுகமாக வாழ்வதை விட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப்பட்டுக் கிடப்பானேன்? என்று வெறுத்து நெஞ்சைவிட்டு நீங்கிப்போக நினையாமல் ‘இதனின் சிறந்தஸ்தாநம் வேறொன்று நமக்கில்லை’ என்று கொண்டு என்னெஞ்சிலேயே ஸ்திரப்ரதிஷ்டையாக இருக்கின்றாய் – என்றும் விரித்துரைக்கலாம். இதுவே அமையாதோ? – ஒருவனுக்கு இதற்கு மேற்படவும் ஒருபேறு உண்டோ? என்றவாறு. சௌரிப்பெருமானை அநுபவித்துவருகிற ஆழ்வாருடைய திருவுள்ளம் திருக்குடந்தை ஆராவமுதன் பக்கல் சென்றுசேர, ஆராவமுதப் பெருமாளே! நீர் உம்முடைய பேறாக என்னெஞ்சிலே வந்துபுகுந்தாலும் பாவியேன் மறந்தொழியலாமே; அப்படி மறந்தொழிகையின்றியே “எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே” என்றாப்போலே நன்றி பாராட்டப் பெற்றேனே!, நீர்வந்து புகுந்தபேற்றுக்கு மேற்பட்ட பேறன்றோ இது! என்றவாறு.


    1570.   
    வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்*  மற்று ஓர் நெஞ்சு அறியான்*  அடியேனுடைச் 
    சிந்தை ஆய் வந்து*  தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*
    கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்கோவினை*  குடம் ஆடிய கூத்தனை 
    எந்தையை எந்தை தந்தை தம்மானை*  எம்பிரானை எத்தால் மறக்கேனே?* 

        விளக்கம்  


    • - எம்பெருமானை யடியேன் மறப்பதற்கு ஒரு ஹேதுவுமில்லையே, எப்படி மறப்பே னென்கிறார். ‘வந்தநாள் வந்து என்னெஞ்சிடங் கொண்டான்’ = எம்பெருமான் தம்முடைய நெஞ்சினுள் வந்த சேர்வதற்கு உறுப்பாகத் தாம் ஒரு முயற்சிசெய்து கைம் முதலுடையரா யிருந்தால் இன்னநாளிலே வந்து சேர்ந்தானென்று தாம் சொல்லக்கூடும்;அங்ஙனன்றியே எம்பெருமான் தானாகவே தன் பேறாகவே வந்துசேரக் கண்டவராதலால் ‘வந்தநாள் வந்து’ என்கிறார். – “ப்ரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாமிட்டது ஒரு பச்சையுண்டாய் அதுக்கு உபகரித்தானாகிலிறே இந்நா ளென்னலாவது; அங்ஙனென்றில்லாமையாலே ப்ரதம ஸ்வீகாரத்தை ‘வந்தநாள்’ என்னு மித்தனையாய்த்துச் சொல்லலாவது” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி. தானாகவே வந்து என்னை விஷயீகரித்து என்னெஞ்சைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டருளின பின் திருவடி திருவனந்தாழ்வான் முதலானார் பக்கலிலும் போவானா யிருக்கின்றிலன்; அன்றியும், ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்யவேண்டும்’ என்று நான் கொண்டிருக்கும் மநோரதத்தைத் தான் உடையனாய்க் கொண்டு, யமபடர் கையிலே யகப்பட்டு நலிவுபட வேண்டிய பாவங்கள் பலவற்றையும் நான் செய்திருக்கச் செய்தேயும் என்னை அந்த நமன்றமர் கையிலே காட்டிக்கொடாமல் தானே நித்ய கைங்கரியங் கொள்ள நின்றான். இப்பேறுதான் அவனுடைய நிர்ஹேதுகமான திருவருளடியாகக் கிடைத்ததாகையாலே இதற்கு ஒரு நாளும் குலைதல் இல்லை யென்னும்படி பெற்றேன் என்கிறார் முன்னடிகளில்.


    3310.   
    ஆரா அமுதே! அடியேன் உடலம்*  நின்பால் அன்பாயே* 
    நீராய் அலைந்து கரைய*  உருக்குகின்ற நெடுமாலே* 
    சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்*  செழு நீர்த் திருக்குடந்தை* 
    ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!*  கண்டேன் எம்மானே!* (2)  

        விளக்கம்  


    • (ஆராவமுதே.) இத்திருவாய்மொழியிலே நம் பூருவர்கள் பொரவும் ஈடுபட்டிருப்பர்களாயிற்று. இங்கு ஈட்டில் நம்பிள்ளை அருளிச் செய்வது பாரீர்;- “உத்தரபூமியிலே லோகஸாரங்க மஹாமுனிகள் வர்த்திவாநிற்க, இங்குத்தையானொருவன் அங்கேறச்செல்ல, ‘பிள்ளாய் தக்ஷிணபூமியில் விசேஷமென்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி யென்றொரு பிரபந்தமவதரித்து சிஷ்டர்கள் பரிக்ரஹித்துப் போரக் கொண்டாடிக்கொடு போராநின்றார்கள்’ என்ன, ‘அதிலே உனக்குப் போவதொரு சந்தை சொல்லிக்காணாய்’ என்ன, “ஆராவமுதே என்கிற வித்தனையும் எனக்குப்போம்’ என்ன, ‘நாராயணாதி நாமங்கவ் கிடக்க இங்ஙனேயொரு நிர்த்தேச முண்டாவதே! இச்சொல் கடையாடுகிற தேசத்தேறப் போவோம்’ என்று அப்போதே புறப்பட்டுப்போந்தார்.”


    3311.   
    எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!*  என்னை ஆள்வானே* 
    எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்*  ஆவாய் எழில் ஏறே* 
    செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்*  திருக்குடந்தை* 
    அம் மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)   

        விளக்கம்  


    • (எம்மானே!) கீழ்ப்பாட்டில் “கண்டேனெம்மானை!” என்ற ஆழ்வாருடைய கருத்து- பிரானே! உன்னை உலகத்தார் காண்கிற ரீதியிலே நானும் காணுமித்தனையேயோ? எனக்காக எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், குசலப்ரச்னம் பண்ணியருளுதல், அணைத்தல் தெய்தருள வேண்டாவோ? என்று கேட்பதாம். அங்ஙனே கருத்துத் தொளிக்கக் கூப்பிடச் செய்தோம் ஆராவமுதன் அசையாதேயிருக்க, மீண்டுமொருபடி கூப்பிடுகிறார். எனக்கு ஸ்வாமியானவனே! அகிலஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே! அப்படிப்பட்ட திவ்யமங்கள விக்ரஹத்தின் அழகைக்காட்டி என்னை ஆட்படுத்திக் கொண்டவனே!, என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் நல்வினை தீவினைகளுக்கு ஏற்றவாறு பலவகைப்பட்ட சரீரங்களை பரீக்ரஹிக்குமாபோலே, நீர்ஹேதுக கருணையினாலும் திவ்யஸங்கல்பத்தாலும் வேண்டினபடியெல்லாம் அவதார ரூபங்களைப் பரிக்ரஹித்துப் பொருள் செய்பவனே!, இங்ஙனே உபகாரமே வடிவாயிருக்கின்ற நீ இன்னமும் எனக்குச் செய்யவேண்டிய உபகாரங்களைச் செய்யத்தவரலாமோ? ஒன்றும் செய்ய வேண்டா; திருக்கண்களைத் திறந்து கடாக்ஷித்தருளுமித்னை போராதே அடியேனுக்கு. இத்திருக்கண்களுக்கும் போலியான கமலங்களெல்லாம் நீரிலே மலர்ந்திருக்கும்படியைக் காணாநின்ற நான் வன்காற்றாறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த மென்கால் கமலத்தடம்போற் பொலிந்த எம்பிரான் தடங்கண்கள் இப்படி மலரவேண்டாவோ என்று துடிக்கின்றேனே, இந்தத் துடிப்பைத் தவிர்க்க வேண்டாவோ வென்கிறார்.


    3312.   
    என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
    உன்னால் அல்லால் யாவராலும்*  ஒன்றும் குறை வேண்டேன்* 
    கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!*  அடியேன் அரு வாழ்நாள்* 
    செல் நாள் எந் நாள்? அந்நாள்*  உன தாள் பிடித்தே செலக்காணே*

        விளக்கம்  


    • (என்னால் செய்கேள்.) இப்படி துடித்துக் கூப்பிட்ட விடத்திலும் குளிர நோக்குதல் குசலப்ரச்னம் பண்ணுதல் ஒன்றும் செய்யாமையாலே, ‘நாம் பேற்றுக்கு ஏதேனும் உபாயம் அனுட்டிக்கவேணும் என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருக்கிறான்போலும்’ என்று கொண்டு ‘பிரானே! நான் என் காரியம் செய்கையென்று ஒன்றுண்டோ? நீயேசென்று தலைக்கட்டித் தரவேணும்’ என்கிறார். முதலடியில் மூன்றுவகையான கேள்விகள் அடங்கியிருக்கின்றன; என் தலையிலே ஏதேனும் காரியம் ஏறிடுவதாக எண்ணியிருக்கிறாயோ? பிறரை ரக்ஷகராகத் தேடியோடும்படி செய்ய நினைத்திருக்கிறாயோ? நீயே செய்வதாக நினைத்திருக்கிறாயோ? என்று கேள்விகள். உன் திருவடிகளைப் பெறுகைக்கு என்னால் செய்யலாவ தில்லாமையாலே என் தலையிலே ஒன்று ஏறிடவேண்டா; நீ உன்னைத் தரப்பார்த்தாயோ? உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயோ? “என்னான் செய்தேன்” என்பதனால் ‘நான் என்ன செய்வது?’ என்று கேட்கிறால்லர்; என்னாலே ஒன்றும் செய்ய முடியாதே என்று கையை விரித்துச் சொல்லுகிறபடி. ஸ்ரீவசனபூஷணத்தில் “என்னான் செய்கேனென்கிற விடத்திலே இம்மூன்றுமுண்டு” என்ற ஸ்ரீஸூக்தி இங்கே அநுஸந்தேயம். அவ்விடத்து மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்; - “எம்பெருமான் தம்முடைய ஆர்த்திகண்டு இரங்கக் - காணாமையாலே தன்னைப் பெறுமிடத்தில் சில ஸாதநாநுஷ்டானம் பண்ணவேணுமென்று இருந்தானாகக்கொண்டு உபாயாந்தரானுஷ்டானத்துக்கு யோக்யதையில்லாதபடி அஜ்ஞானான நான் என்செய்வேன்? ஜ்ஞானம் தந்தோமே யென்னில், நீதந்த ஜ்ஞானத்தாலே ஸ்வரூப பாரதந்த்ரியத்தை யுணர்ந்து ஸாதநாநுஷ்டானம் அப்ராப்தம் என்றிருக்கிற நான் என் செய்கேன்? ஸ்வரூபத்துக்குச் சேராதாகிலும் உன்னைப் பெறலாமாகில் அது தன்னையனுஷ்டிக்கலாமிறேஜ்ஞானமாத்ரத்தைத் தந்தாயாகில்; பக்தி ரூபாபந்நஜ்ஞானத்தைத் தருகையாலே ஒன்றையும் அடைவுபட அநுஷ்டிக்க க்ஷமனமல்லாதபடி பக்தி பரவசனான நான் என் செய்கேன் என்று இம்மூன்றும் ஆழ்வார்க்கு விவக்ஷிதம்”


    3313.   
    செலக் காண்கிற்பார் காணும் அளவும்*  செல்லும் கீர்த்தியாய்* 
    உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய*  ஒரு மூர்த்தி* 
    நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!*  உன்னைக் காண்பான் நான்- 
    அலப்பு ஆய்*  ஆகாசத்தை நோக்கி*  அழுவன் தொழுவனே*.

        விளக்கம்  


    • (செலக்காண்கிற்பார்.) பிரானே! என்போல்வார்க்காக நீ திருக்குடந்தையிலே ஸன்னிதி பண்ணியிருந்தும் நினைத்தபடி பரிமாற்றம் கிடையாமையாலே நான் நோவுபடாநின்றே னென்கிறார். முதவடியினால், நீ படைத்த புகழெல்லாம் பாழாய்ப்போகிறதேயென்று வயிறு பிடிக்கிறார். தமக்கு உதவாமையினாலே இங்ஙனே சொல்லுகிறபடி. எம்பெருமானடைய கீர்த்திகளை (அதாவது ஸ்வரூப ரூபகுணவிபூதிகளை) யார் யார் எவ்வளவு பேசுகிறார்களோ அவை அவ்வல்வளவாயிருக்கும். மந்தமதிகள் பேசப்புக்காலும் அவர்களது வாக்கிலே அடங்கி நிற்கும்; மஹாமதிகள் பேசப்புக்காலும் அவர்களது திறமைக்குத் தக்கபடி கரைகட்டாக்காவேரிபோலே பெருகிச் சென்றிருக்கும். உலப்பு இலானே! = உலப்பு-முடிவு; அந்த குணவிபூதிகளினுடைய கணனைக்கு முடிவில்லாமலிருக்குமவனே! என்றபடி. எல்லாவுலகுமுடைய ஒரு மூர்த்தி! = மூர்த்தியென்று திவ்யமங்கள விக்ரஹத்துக்கம் பெயர், ஐச்வர்யத்துக்கும் பெயர்; வடிவழகைக்காட்டி. எல்லாப் பிராணிகளையும் ஈடுபடுத்திக்கொள்ள வல்லவனே! என்றும், ஸகல லோகங்களுக்கும் நிர்வாஹகனான ஸர்வேச்வரனே! என்றும் பொருள்படும். என்னை நிர்வஹியாத வுனக்கு ஸர்வேச்வரனேனென்று பெயர் தகுமாவென்று உறுத்திச் சொல்லுகிறபடி.


    3314.   
    அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்*  பாடி அலற்றுவன்* 
    தழு வல்வினையால் பக்கம் நோக்கி*  நாணிக் கவிழ்ந்திருப்பன்*
    செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!*  செந்தாமரைக் கண்ணா!* 
    தொழுவனேனை உன தாள் சேரும்*  வகையே சூழ்கண்டாய்*.    

        விளக்கம்  


    • (அழுவன் தொழுவன்.) பிராவே! உன் கண்ணழகிலே யீடுபட்டுப் பலவகை ப்ரவ்ருத்திகளும் பண்ணின விடத்திலும் பயன் பெற்றிலேன்; உன் திருவடிகளைச் சேரும்படி நீயே பார்த்தருள வேணுமென்கிறார். அழுவன் தொழுவன் - சிறுவர் அழுகையினாலேயே எதையும் ஸாதிப்பர்கள்; அறிவுடையார் தொழுகையினாலேயே எதையும் ஸாதிப்பர்கள்; இருவர் படியையும் நான் ஏறிட்டுக்கொண்டு அழுவதும் தொழுவதும் செய்தாயிற்று. ஆடிக்காண்பன் - “இத்தனை சோறிடுகிறோம்; ஆடுகிறாயா?” என்றால், பெரும் பசியாளர் ஆடுவதுண்டே; அப்படி ஆடியும் பார்ப்பேன். பாடியலற்றுவன் = சித்தப்பரமம். கொண்டவன் பாடுவதும் அலற்றுவதும் செய்யுமாபோலே அவையும் செய்யா நின்றேன். தழுவல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் = இங்கே வல்வினையென்று காதலைச் சொல்லுகிறது; வல்வினையின் பயனாக வுண்டான காதல் என்றபடி. அபேக்ஷித்தபடி ஸித்தயாமையாலே காதலை வல்வினையாகக் கருதினாராயிற்று. என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற ப்ரபல பாபத்தாலே, நீ வருவதாக நினைத்துப் பக்கங்களிலே பார்த்து, வந்து காட்கிரதரக் காணாமையாலே லஜ்ஜையோடே கவிழ்தலையிட்டிருப்பே. தலைகவிழ்ந்து நிற்பேன்.


    3315.   
    சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து*  உன் அடிசேரும்- 
    ஊழ் கண்டிருந்தே*  தூராக்குழி தூர்த்து*  எனை நாள் அகன்று இருப்பன்?*
    வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!*  வானோர் கோமானே* 
    யாழின் இசையே! அமுதே!*  அறிவின் பயனே! அரிஏறே!*.

        விளக்கம்  


    • (சூழ்கண்டாய்.) பிரானே! உன்னுடைய போக்யதையிலே அகப்பட்டிருந்துள்ள வெனக்கு ஓர் உபகாரம் செய்தருளவேணும்; உன்னைப் பெறுதற்கு இடையூறான தொல்லைவினைகளை யெல்லாம் தொலைத்தருளி உன்னைப் பெறுவதொரு நல்விரகு பார்த்தருள வேணும் என்கிறார். நீ எழுந்தருளியிருக்கு மிடமான திருக்குடந்தையானது சிறந்த கீர்த்தியையுடையவர்களான மஹான்கள் வர்த்திக்கும்படியானது; அவர்களுடைய கீர்த்தியாதென்னில்; உன்னைப் பெறுதற்கு விரோதியான கரும் பந்தங்களெல்லாம் கழியப்பெற்றவர்கள் உன்னுங் கீர்த்தியாம்; அத்தகைய கீர்த்தி வாய்ந்தவர்கள் வாழுமிடத்தே நீயிருந்துவைத்து எனக்கு அந்தக் கீர்த்தியை விளைக்காதொழியத்தகுமோ? (வானோர்கோமானே!) நித்யர்களையும் முக்தர்களையும் போலே எம்மை அடிமைகொள்ள வேண்டாவோ? (யாழினிசையே அமுதே) உன்னடைய போக்யதையை நான் அறியப் பெறாதிருந்தேனாகில் இங்ஙனே கிடந்து துடிப்போனோ! யாழின் இசைதானே வடிவொடுத்தாற்போலேயன்றோ உன்னுடைய இனிமைதான் இருப்பது; அமுதமும் எனக்க நீயேயன்றோ. (அறிவின் பயனே) * ந போதாந் அபரம் ஸுகம்* என்கிறபடியே அறிவுக்குப்பலன் ஸுஸுகமாகையாலே என்னுடைய ஸுகமே வடிவெடுத்திருப்பவனே! என்றபடி. (அரியேறே) அரி - சிங்கம்; ஏறு ரிஷபம். இவ்விரண்டும் சிறப்புக்க வாசகங்கள்; ‘புருஷஸிம்ஹம்’ ‘புருஷர்ஷபம்’ என்பர்களன்ளோ? மிகச்சிறந்தவனே! என்றபடி.


    3316.   
    அரிஏறே! என் அம் பொன் சுடரே!*  செங்கண் கருமுகிலே!* 
    எரி ஏய்! பவளக் குன்றே!*  நால் தோள் எந்தாய் உனது அருளே*
    பிரியா அடிமை என்னைக் கொண்டாய்*  குடந்தைத் திருமாலே* 
    தரியேன் இனி உன் சரணம் தந்து*  என் சன்மம் களையாயே*.

        விளக்கம்  


    • (அரியேறே.) பிரானே! உன்னுடைய வைலக்ஷண்யத்தை நீயே காட்டித்தந்து அடிமையிலே என்னை ஊன்றவைத்தாயானபின்பு உன் திருவடிகளைத்தந்து தீரவேணுமன்றோ; தந்து பின்னை ஸம்ஸாரத்தைக் களைந்தொழியாய் என்கிறார். மேனாணிப்புத்தோற்ற விருக்குமிருப்பை அரியேறே! என்ற விளி காட்டும். அந்த மேனாணிப்புக்குத் தகுதியான வடிவுபடைத்தவ னென்கிறது அம்பொற்சுடரே! என்பது. விலக்ஷயமான பொன்போலே ஸ்ப்ருக்ஷணீணமான ஒளியையுடையவனே! என்றபடி. வடிவின் புகரைக்காட்டி என்னை யீடுபடுத்திக்கொண்டவனே! என்றவாறு. செங்கட்கருமுகிலே! - வாத்ஸல்யமாகிற அம்ருதத்தை வர்க்ஷிக்கிற திருக்கண்களையுடையவனே! என்றபடி. எரியேபவளக்குன்றே! = எரியென்று கேட்டை நக்ஷத்திரத்திற்கு வாசகமாய் நக்ஷத்ரஸாமாந்யத்தைச் சொல்லி நிற்கும். நக்ஷத்ரமண்டலத்ளைவும் ஓங்கியிருக்கிற பவளக்குன்றபோலே (பவழமயமான மலைபோலே) விலக்ஷணமான வடிவு படைத்தவனே! உகவாதார்க்கு அபிபவிக்க வொண்ணாமையும் உகந்தார்க்குப் பரமபோய்னாயிருக்கையும் இத்தாவல் நினைக்கிறது. நால்தோளெந்தாய்! = கல்பகதரு பணைத்தாற்போலேயிருக்கிற திருத்தோள்களைக்காட்டி என்னை அநந்யார்ஹ சேஷப்படுத்திக் கொண்டவனே! என்கை. எம்பெருமானுடைய திருத்தோள்கள் நம்மாழ்வாருடைய திருவாக்கில் நுழைந்து புறப்பட்டவாறே விலக்ஷணமான வொருபெருமைபெறும். ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்தில்.


    3317.   
    களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்*  களைகண் மற்று இலேன்* 
    வளை வாய் நேமிப் படையாய்!*  குடந்தைக் கிடந்த மா மாயா* 
    தளரா உடலம் எனது ஆவி*  சரிந்து போம்போது* 
    இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்*  போத இசை நீயே*.  

        விளக்கம்  


    • (களைவாய் துன்பம்.) ப்ரபந்நர்கட்கு ஆகிஞ்சல்பம், அநந்யகதித்வம் என்ற இரண்டும் குலையாதிருக்கவேணும். உபாயாந்தரங்களில் அந்வயலேசமும் அற்றிருக்கை ஆகிஞ்சந்ய மெனப்படும். எம்பெருமான்பக்கலில் முகம் பெறாதொழியினும் பிறர்மனைதேடி யோடப்பாராதே. “ரக்ஷித்தபோதோடு ரக்ஷியாதபோதோடு வசியற இவ்விடமொழிய வேறுயுகமல்லை” என்கிற திண்ணிய அத்யவஸாயந்து டனிருக்கை அநந்யகதித்வமெனப்படும். அது இப்பாட்டின் முதலடியில் தெளிவாகிறது. எனக்கு உன்னுடைய அனுபவம் கிடையாமற்போனாலும் உன் திருவடியே தஞ்சமென்று பிறந்த விச்வாஸம் பார்த்தருளவேணுமென்கிறார். துன்பம் களைவா, துன்பம் களையாதொழிவாய், களைகண்மற்றிலேன் = நீ சரமச்லோகத்தில் * ஸர்வபாபோப்யோ மோக்ஷயிஷ்யாமி * என்று ப்ரதிஜ்ஜை பண்ணினபடி செய்தாலும் செய், தவிர்த்தாலும் தவிர் ; உன்காரியத்தில் நீ எப்படியிருந்தாலும், என் காரியத்தில் நான் நிஷ்டை குலையமாட்டேன். வளைவாய் நேமிப்படையாய் - *நம்மேல் வினைகடிவான்- எப்போதும் கைகழலாநேமியான் * என்றந்றே எம் போல்வாருடைய உறுதியிருப்பது. உன் கையிலே ஆயுதமிருந்தும் துன்பம் களையாதிருத்தல் தகுதியோ? குடந்தைகிடந்த மாமாயா திருக்குடந்தையிலேவந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண்வளர்ந்தருளுகிறது எதற்காக? தளராவுடலம் = ‘உடலம் தளரா’ என்று அந்வயிப்பது. தளரா வென்பது செய்யாவென்னும் வாய்ப்பாட்டிறந்தகாலவினையெச்சம்; தளர்ந்து என்றபடி. எனது சரீரமானது கட்டுக்குலைந்து என் பிரானன் முடிந்து போமளவு இதுவாயிற்று. (இளையாது இத்யாதி) அபேக்ஷிதம் பெறுகிறேன், இல்லை, அது தனிப் பட்ட விஷயம். நான் உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற் பண்ணியருளவேணும். அநுபவம் பெறாமையாலே அதுக்கடியான உபாயாத்யவஸாயமும் குலைகிறதோவென்று அஞ்சி குலையாதபடி பார்த்தருள வேணுமென்றாராயிற்று ஒருங்க - நிரந்தரமாக என்றபடி.


    3318.   
    இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்*  இருத்தும் அம்மானே* 
    அசைவு இல் அமரர் தலைவர் தலைவா*  ஆதிப் பெரு மூர்த்தி* 
    திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்*  திருக்குடந்தை* 
    அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!*  காண வாராயே*.

        விளக்கம்  


    • (இசைவித்தென்னை.) கண்ணாலே காணலாம்படி வரவேணு மென்கிறார். இதில் முதலடியில் ஸத்ஸம்ப்ரதாயாத்த்தஸாரம் பொதிந்து கிடக்கிறது. ஆசார்ய ஹ்ருதயத்தில் “மதியாலிசைந்தோ மென்னும் அநுமதிச்சைகள் இருத்துவ மென்னாதவென்னை யிசைவித்த வென்னிசைவினது” என்ற சூர்ணிகை இங்கே அநுஸந்தேயம். இதன் கருத்தாவது -ஆழ்வார்க்கு எம்பெருமான் திறத்திலே யுண்டான ஆபிமுக்க்யம் எம்பெருமானடைய க்ருஷியினாலேயே உண்டானதத்தனை. * வைத்தேன் மதியாலெனதுள்ளத்தகத்தே * என்று நமக்க அநுமதியிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே ஆழ்வார்; * யானுமென்னஞ்ச மிசைந்தொழிந்தோம்* என்று தமக்க இசைவும் இருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே; அந்த அநுமதியும் இச்சையும் பகவத் விஷயீகாரத்தைக்குறித்து ஹேதுவானாலோ வென்னில்; ஆகாது. அவையும் எம்பெருமானுடைய க்ருஷிபலமென்னுமிடம் *யானொட்டியென்னுளிருத்துவ மென்றிலன்* இசைவித்தென்னையுன் தாளிணைக்கீழிருத்து மம்மானே * என்னிசைசினை * என்பது முதலான தம்முடைய அருளிச் செயல்களினாலேயே விளங்க மென்றபடி. இசைவித்து என்னை என்கையாலே நெடுநாள் திருவடிஸேவைக்கு இசையாதிருந்த தம்மை எம்பெருமான்தானே வரந்தி யிசைவித்தமை ஸ்பஷ்டமாகவிளங்கும். திசைவில்வீசும் செழுமாமணிகள் என்று திருமழிசை யாழ்வார்போல் வரரைச் சொல்லுகிறதென்று ஸம்ப்ரதாயம். திசைகள்தோறும் பரந்த புகழையுடைய மஹாஜ்ஞாதாக்கள் சேருமிடமான திருக்குடந்தை யென்கை. இங்கே ஈட்டுஸ்ரீஸூக்தி :- ஆராவமுதாழ்வார் திருமழிசைப்பிரான் போல்வார் புருஷரத்தனங்கள் சேரும் திருக்குடந்தை யென்று நிர்வக்ஷிப்பர்கள்” என்று.


    3319.   
    வாரா அருவாய் வரும் என் மாயா!*  மாயா மூர்த்தியாய்* 
    ஆரா அமுதாய் அடியேன் ஆவி*  அகமே தித்திப்பாய்* 
    தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!*  திருக்குடந்தை- 
    ஊராய்!*  உனக்கு ஆள் பட்டும்*  அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)

        விளக்கம்  


    • (வாராவருவாய்.) திருக்குடந்தையிலே புகவே நம் அபேக்ஷிதங்களெல்லாம் பெறலாமென்று புக்க ஆழ்வார் அங்ஙனம் பெறாமையாலே இன்னம் எத்தனையிடம் தட்டித் தியக்கடவேனோவென்கிறார். வாரா அருவாய் வரும் = நான்னுக்கு விஷமாகி வாராதே அரூவித்ரவ்யமாய் வருகிறவனே! என்கை- வெளியில் கண்ணாலேகண்டு அநுபவிக்க வாராதே, மறந்து பிழைக்கவு மொண்ணாதபடி அந்தரங்கத்திலே அருவியாய்க்கொண்டு வாராதே. மறந்து பிழைக்கவுமொன்னாதபடி அந்தரங்கத்திலே அரூபியாய்க்கொண்டு ப்ரகாசிக்கிற ஆச்சார்யபூதனே! மாயாமூர்த்தியாய் = ஒருபோதும் ஒருவிதமான விகாரத்தையு மடையாத வடிவுடைத்தவனே! கருமமடியான விகாரம் இல்லையென்கிறதத்தனை; ஆக்ரிதர் திறத்தில் அநுக்ரஹமடியாக விளையும் விகாரம் சாஸ்த்ரவரம்புக்குக் கட்டுப்பட்டதன்றே. ஆராவமுதாய் அடியேனாவியகமே தித்திப்பாய்! = எல்லார் வாயினும் ஆராவமுது என்று வருகிறப்போலேயே என்வாயிலும் வருகிறபடி! * உளங்கனிந்திருக்குமடியவர்கள் தங்கள் உள்ளந்துளூரிய தேனை* என்னுமாபோலே என்னுடைய அந்தரங்கமகப்படத் தித்திக்கும்படியை நானென் சொல்வேனென்கிறார். (தீராவினைகள் இத்யாதி.) அநுபவித்தே தொலைக்கவேண்டிய வினைகளும் தொலையுமாறு என்னையடிமை கொள்குகைக்குத் திருக்குடந்தையிலே வந்து நித்ய ஸன்னிதி பண்ணியிருக்குமவனே! ஸம்ஸாரிகளை அநுபவிப்பிக்கவந்து கிடக்கிறவுனக்கு ஆட்பட்டும் இன்னும் என் ஆர்த்தி தீரப்பெற்றதில்லையே. இன்ன மெத்தனை திருப்பதிகள் புக்குத் தட்டித்திரியங்கடவேனாகத் திருவுள்ளமோ? தெரியவில்லையே என்கிறார்.


    3320.   
    உழலை என்பில் பேய்ச்சி முலையூடு*  அவளை உயிர் உண்டான்* 
    கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட*  குருகூர்ச் சடகோபன்* 
    குழலின் மலியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
    மழலை தீர வல்லார்*  காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)

        விளக்கம்  


    • (உழலையென்பின்.) இப்பதிகம் பழூதறக் கற்கவல்லார் காமிநிகளுக்குக் காமுகர்போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு யோக்யராவர் என்று பலனுரைத்துத் தலைக்கட்டுகிறார். பூதனைமுலையுண்டு அவளை முடித்து விரோதி நிரஸாநசீலனென்று புகழ்பெற்ற கண்ணபிரானுடைய திருவடிகளையே தஞ்சமாகக் கொண்ட ஆழ்வார், திருக்குழலோசையிற் காட்டிலும் அதிசயித்ததாம்படி யருளிச்செய்த ஆயிரம் பாசுரத்தில் இப்பத்தையும் ஊற்றத்துடனே சொல்லவல்லார்களை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல்விழுந்து யோக்யராகக்கொள்வர்கள் என்றதாயிற்று. மூலத்தில் “காமர்மானேய் நோக்கியர்க்கு” என்று இவ்வளவே யிருப்பதால் மானேய் நோக்கியரான ஸ்த்ரீகளுக்கு விரும்பத்தக்கவராவர் என்று பொருள்பட வேண்டாவோவென்று சங்கித்தலாகாது * துராக்குழி தூர்த்துயனைநாளகன்றிருப்பன் * என்று நாலு பாசுரங்களுக்கு முன்னே அருளிச்செய்த பரமவிரக்தாக்ரேஸரரான ஆழ்வார் அதற்குப் பொருந்தாதபடி பலச்ருதி சொல்லார். ஆகவே, அது உவமையாகக் காட்டினதத்தனை. உவமைக்கு வாசகமான சொல் இல்லையேயென்று கேட்கவேண்டா; தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே என்றதுகாண்க. தாமரைபோன்ற திருவடிகளைச் சொல்ல வேண்டுமிடத்துத் தாமரையென்றே சொன்னது போலவாம். அன்றியே, திருநாட்டிலுள்ள அப்ஸரஸ்ஸுக்களால் விரும்பி ஆதரிக்கப் பெறுவர்கள் என்றுமாம். இது எளிதான பொருளென்று பதவுரையில் காட்டப்பட்டது.


    2673.   
    காரார் வரைகொங்கை கண்ணர் கடலுடுக்கை*
    சீரர் சுடர்சுட்டி செங்களுழிப் பெராற்று*
    பெரார மார்பின் பெருமா மழைக்குந்தல்*
    நீராரவெலி நிலமங்கை என்னும்* இப்
    பாரோர் சொலப்பட்ட மூன்னன்றெ*  (2) -- அம்மூன்றும்

        விளக்கம்  


    • உரை:1

      “காரார்வரைக் கொங்கை“ என்று தொடங்கி “நீராரவேலி“ என்ணுமளவம் பூமிப்பிராட்டியை வருணப்பதாம். பூமிப்பிராட்டியின் வருணனைக்கு இப்போது புருஷார்த்தங்களைப் பரிக்ரஹித்த சேதநர்களைச் சொல்லவேண்டிற்றாகி, அச்சேதநர்கள் இருக்குமிடத்தைச் சொல்ல வேண்டி அவர்கள் இருக்கப்பெற்ற பூமியைச் சொல்லப்புகுந்து அவ்வழியாலே அப்பூமிக்கு அபிமாநிநியான பூமிப்பிராட்டியை வர்ணிக்கிறாரென்க. தான் வைவர்ணியப்பட்டு வருந்திக்கிடக்க, தனது சக்களத்தியாகிய பூமிபிராட்டி குறியழியாத அவயவங்களுடனே ஒழுங்காக இருக்கப்பெற்றாளே! என்ற உவகை தோன்ற வருணிப்பதாகச் சொல்லுவாரு முளர். இப்பரகால நாயகியும் பூமிப்பிராட்டியும் எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டவர்களாதலால் சக்களத்தி முறைமை யுண்டென்க. பூமிப்பிராட்டி யென்றால் மங்கையர்க்கிய ஸ்ந்நிவேசங்கள் அவளுக்கு இருக்க வேண்டுமேயென்ன, அவ்வளவும் செவவ்னே உண்டு என்று மூதலிக்கிறார் ஆறு விசேஷணங்களினால். கறுத்த முலைக் கண்களையுடைய முலைகளின் ஸ்தானத்திலே மேகம்படிந்த மலைகள் உள்ளன வென்கிறார் முதல விசேஷணத்தாலே. இங்க, வரை என்று பொதுப்படக் கூறியிருந்தாலும் “தென்ன்னுயர்பெருப்பும் தெய்வ வடமலையுமென்னு மினவயே முலையா வடிவமைந்த“ என்று இவ்வாழ்வார்தாமே பெரிய திருமடலில் அருஹிச் செய்ததுகொண்டு திருமாலிருஞ் சோலைமலையும் .திருவேங்கடமலையுமென்று சிறப்பாகக் கொள்ளலாயிற்று, சிறந்த மேரு முதலிய மலைகளை நிலமங்கைக்குக் கொங்கையாகச் சொல்லாமாயிருக்க அவற்றைவிட்டுத் தென் வடமலைச்சொன்னது – நாயகன் விரும்பிப் படுகாடு கிடக்குமிடமே முலையாகத் தகுதலால். அழகிய சேலையின் ஸ்தானத்திலே கடல் உள்ளதென்கிறார் இரண்டாவது விசேஷணத்தால் (ஸமுத்ராம்பரா) என்று வடமொழியிலே பூமிக்குப் பெயர் வழங்குமாறறிக. நெற்றிச்சுட்டியின் ஸ்தானத்திலே ஸூர்யனுளனென்கிறார் மூன்றாம் விசேஷணத்தால். மார்பின் ஸ்தாந்ததிலே பெரிய ஆறுகளும், அம்மார்பிலணியும் ரத்நயமான ஆபரணங்களின் ஸ்தாநத்திலே அவ்வாறுகளின் கலங்கிய செந்நீர்ப் பெருக்குகளும் உள்ளனவென்கிறார் நான்காம் விசேஷ்ணத்தால், மயிர்முடியின் ஸ்தானத்திலே நீர்காண்டேழுந்த காளமேகங்கள் உள்ளன வென்கிறார். ஐந்தாம் விசேஷணத்தால் இனி, சிறந்த மஹிஷி யென்றால் கட்டுங்கால்லுமாயிருப்பவே, அஃது இவளுக்கு முண்டோவென்ன, ஆவரணஜலமே இவளுக்கு காப்பெண்கிறார் ஆறாம் விசேஷணத்தால் நீர் ஆரம் –வேலி ஆரம் என்றது ‘ஆவரணம்‘ என்ற வடசொல்லின் கிதைவு என்பர். அண்டத்துக்குப் புறம்பே பெருகிக்கிடப்பது ஆவரண ஜலம் என்றுணர்க. இப்படிகளாலே நிலமங்கை என்றற்கு உரிய இப்பூமியிலே வாழ்பவர்கள் புருஷார்த்தமென்று சொல்வது, அறம் பொருள். இன்பம் என்கிற தர்ம அர்த்த காமங்கள் மூன்றேயாம்.

      உரை:2

      "திருமங்கையாழ்வார் தெய்வக் காதல் பற்றிய பாடல்களில், தம்மை நாயகியாகவும், திருமாலை நாயகனாகவும் கொண்டு பாடுமிடத்தில்,  காதல் கைகூடப் பெறாமல் ஏங்குவதால் மடல் ஏறும் முயற்சியை நாயகி மேற்கொள்வதாக அமைத்து,சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று இரண்டு மடல் பாடல்களைப் பாடியுள்ளார். பழைய தமிழ் இலக்கியங்களில், தலைவனே காதல் கைகூடப் பெறாமல் மடலேறும் மரபு உண்டு.   தலைவியின் இணங்காத தன்மையையும் அவளது கொடுமைகளையும் அந்த ஊர் முழுவதற்கும் பறையறைந்து தெரிவிப்பதற்காகத் தலைவியின் படத்தை வரைந்து எடுத்துக்கொண்டு பனைஓலைக் குருத்தில் குதிரை செய்து அதன்மீது ஏறி ஊர்வலம் வருவான் தலைவன்; தற்கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்துவான்.
      ஆனால் நாயகியாகத் தன்னைப் பாவித்துப் பாடும் ஆழ்வார்,  மரபை மாற்றித் தலைவியே மடலேறுவதாகப் புதுமை செய்துள்ளார். தமிழ் மரபில் தலைவனுக்கு மட்டுமே ‘மடல் ஏறுதல்’ கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தெய்வீகக் காதல் என்பதால் பெண்ணாகப் பாவித்துக் கொள்ளும் அடியவர் மடலேறுவது ஏற்புடையது எனலாம்."


    2672.   
    ஒரு பேருந்தி இருமலர்த் தவிசில்,* 
    ஒருமுறை அயனை ஈன்றனை,* ஒருமுறை- 
    இருசுடர் மீதினில் இயங்கா,* மும்மதிள்- 
    இலங்கை இருகால் வளைய,* ஒருசிலை- 
    ஒன்றிய ஈர்எயிற்று அழல்வாய் வாளியில்- 
    அட்டனை,* மூவடி நானிலம் வேண்டி,* 
    முப்புரி நூலொடு மான்உரிஇலங்கு-
    மார்வினில்,* இருபிறப்பு ஒருமாண்ஆகி,* 
    ஒருமுறை ஈரடி மூவுலகு அளந்தனை,* 
    நால்திசை நடுங்க அம்சிறைப் பறவை-
    ஏறி,* நால்வாய் மும்மதத்து இருசெவி- 
    ஒருதனி வேழத்து அரந்தையை,* ஒருநாள்-
    இருநீர் மடுவுள் தீர்த்தனை,* முத்தீ- 
    நான்மறை ஐவகை வேள்வி,* அறுதொழில்-
    அந்தணர் வணங்கும் தன்மையை,* ஐம்புலன்-
    அகத்தினுள் செறித்து,* நான்குஉடன் அடக்கி- 
    முக்குணத்து இரண்டுஅவை அகற்றி,* ஒன்றினில்-
    ஒன்றி நின்று,* ஆங்கு இரு பிறப்புஅறுப்போர்-
    அறியும் தன்மையை,* முக்கண் நால்தோள்- 
    ஐவாய் அரவோடு* ஆறுபொதி சடையோன்- 
    அறிவுஅரும் தன்மைப் பெருமையுள் நின்றனை,* 
    ஏழ்உலகு எயிற்றினில் கொண்டனை,* கூறிய-
    அறுசுவைப் பயனும் ஆயினை,* சுடர்விடும்-
    ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை,* சுந்தர-
    நால்தோள் முந்நீர் வண்ண,* நின் ஈரடி-
    ஒன்றிய மனத்தால்,* ஒருமதி முகத்து-
    மங்கையர் இருவரும் மலரன,* அங்கையில்-
    முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,* 
    நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,* 
    மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,*  
    அறுபதம்முரலும் கூந்தல் காரணம்*
    ஏழ்விடை அடங்கச் செற்றனை,*  அறுவகைச்-
    சமயமும் அறிவரு நிலையினை,* ஐம்பால்-
    ஓதியை ஆகத்து இருத்தினை,* அறம்முதல்-
    நான்கு அவைஆய் மூர்த்தி மூன்றாய்* 
    இருவகைப் பயன்ஆய் ஒன்றுஆய் விரிந்து-
    நின்றனை,* குன்றா மதுமலர்ச் சோலை- 
    வண்கொடிப் படப்பை,* வருபுனல் பொன்னி-
    மாமணி அலைக்கும்,* செந்நெல் ஒண்கழனித்- 
    திகழ்வனம் உடுத்த,* கற்போர் புரிசைக் -
    கனக மாளிகை,* நிமிர்கொடி விசும்பில்- 
    இளம்பிறை துவக்கும்,* செல்வம் மல்கு தென்- 
    திருக்குடந்தை,* அந்தணர் மந்திர மொழியுடன்- 
    வணங்க,* ஆடுஅரவுஅமளியில் அறிதுயில்- 
    அமர்ந்த பரம,*  நின் அடிஇணை பணிவன்- 
    வரும்இடர் அகல மாற்றோ வினையே   (2)  

        விளக்கம்  


    • உலகங்களடங்கலும் பிரளயங் கொண்டபின் மீண்டும் உலகங்களைப் படைக்க எம்பெருமான் தனது திருநாபிக்கமலத்தில் நான்முகக் கடவுளை படைத்து அவனுக்கு வேதங்களை பழையபடியே ஓதுவித்து அப்பிரமனைக் கொண்டு முன்போலவே எல்லா வுலகங்களையும் எடைப்பதாக நூல்கள் கூறும். “உய்ய வுலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை“ என்றார் பெரியாழ்வார்.இராவணனுடைய ஒப்புயர்வற்ற செல்வத்தைக்கண்டு அனுமானும் அளவற்ற ஆச்சரியமடைந்தானென்பர் வான்மீகி முனிவர். இப்படிப்பட்ட இலங்கையை வாளியின் அட்டனை என்று அந்வயம் வாளியாவது அம்பு. அஃது எப்படிப்பட்டதெனில் அதன் கொடுமை தோற்ற மூன்று விசேஷணங்களிடுகிறார். இருகால் வளைய ஒரு சிலை யொன்றியதும், ஈரெயிற்றதும், அழல்வாயதுமாம் அவ்வாளி. ஸ்ரீ சார்ங்கமென்னும் இராமபிரானதுவில் இரண்டு கோடியும் வளைந்து நிற்குமென்றது இயல்பு நவிற்சி, ஸ்வபாவோக்தி. அந்த சார்ங்கத்திலே தொடுக்கப்பட்டதாம். ஈரெயிறு – ஈர்கின்ற எயிற்றையுடையது என்றுமாம். முப்புரிநூல் –ப்ரஹ்மசாரிகள் பூணும் யஜ்ஞோபவீதம் மூன்று புரியை யுடையதாம். (அதாவது – மூன்று வடமுடையதாம்) மானுரி – அந்தப்பூணுநூலில் க்ருஷ்ணாஜினத்தை முடிந்து அணிதல் மரபு. “மான் கொண்ட தோல் மார்பின் மாணியாய்“ என்றார் பெரிய திருமொழியிலும். இருபிறப்பு – ‘த்விஜ‘ என்றும், ‘த்விஜந்மா என்றும், த்விஜாதி என்றும் வடமொழியில் பார்ப்பனர் வழங்கப்படுவர். “ஜந்மநா ஜாயதே சூத்ர, கர்மணா ஜாயதே த்விஜ“ (யோனிபிற்பிறப்பது ஒரு பிறவி, பிறகு வேத மோதுதல் முதலிய கருமங்களால் பிறப்பது இரண்டாம் பிறவி) என்று சொல்லப்பட்டுள்ளமை காண்க.பெரிய காதுகளையுடையது என்றுமாம். யானைக்கு வாய்தொங்குதலும் மத நீர் பெருகுதலும் காதுகள் பெரிதாயிருத்தலும் அதிசயமாக விஸயமன்றே, இதைச்சொல்லி வருணிப்பதற்கு ப்ரயோஜனம் என்னெனில் – ஒரு குழந்தை கிணற்றில் விழுந்து போக, அதனையெடுத்துக் கரையிலேபோட்டவர்கள் “அந்தொ! இதொரு கையழகும் இதொரு தலையழகும் இதொரு முகவழகும் என்னே!“ என்று சொல்லி மாய்ந்து போவார்களன்றோ, அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும் விடுவித்தபின் அதனுடைய வாயும் செவியும் முதலிய அவயவங்களின் அழகிலே ஆழ்ந்து கரைந்தமைதோற்ற அந்த பகவத் ஸமாதியாலே ஆழ்வார் ஆனையை வருணிக்கின்றாரென்க.நான்கு உடனடக்கி –“ஆஹா நித்ரா பய மைதுநாநி ஸாமாந்ய மேதத் பசுபிர் நராணாம்“ என்றபடி உணவு உட்கொள்ளுதல், கண்ணுறங்குதல், எந்த வேளையில் என்ன தீங்கு நேரிடுமோவென்று பயப்பட்டுக்கொண்டிருத்தல், விஷய போகங்களை யநுபவித்தல் என்கிற இந்நான்கும் நாற்கால் விலங்குகட்கும் பொதுவாகையாலே இவற்றைத் தள்ளி ஞானத்தையே கடைபிடித்து என்றதாயிற்று. முக்குணத்து இரண்டவை அகற்றி – ஸ்தவகுணமென்றும் ரஜோகுணமென்றும் தமோகுணமென்றும் சொல்லப்படுகிற மூன்று குணங்களில் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் அந்யதாஜ்ஞான விபரீதஜ்ஞானங்களுக்குக் காரணமாதலால் அவற்றையொழித்து, தத்துவ ஞானத்துக்குக் காரணமாகிய ஸத்வகுணத்தைடையராகி என்றபடி. ஆக இந்திரியங்களைப்பட்டி மேயாமலடக்கி, ஆஹார நித்ராபய மைதுநங்களை விலக்கி ஸத்வகுண நிஷ்டராயிருந்து யோகுபுரிந்து அந்த யோகத்தின் பலனாக ஸம்ஸாரப் படுகுழியைப் புல் மூடச்செய்து நற்கதி நண்ணுகின்ற மஹா யோகிகளால் அறியக்கூடிய ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையவன் எம்பெருமான் என்றதாயிற்றுஆறுபொதி சடையோன் என்றவிடத்து அறியவேண்டிய கதை. எம்பெருமான் உலகளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன்கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாச கங்கையை, ஸூர்யகுலத்துப் பகீரத சக்ரவர்த்தி கபிலமுனிவனது கண்ணின் கோபத்திற்கு இலக்காய் உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனது மூதாதையான ஸகரபுத்ரர் அறுபதினாயிரவரை நற்கதிபெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலம் தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக் கொண்டு வருகையில், அவனது வேண்டுகோளாலும் சிவபிரான் தான் புனிதனாகவேண்டிய அபிநிவேத்தாலும் அந்நதியை முடியின்மேலேற்றுச் சிறிது சிறிதாகப் பூமியில் விட்டனன் என்பதாம்.ஹிரண்யகசிபுவின் உடன் பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச்சென்ற போது தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது நோட்டினாற் குத்திக் கொன்று பாதாள லோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற் குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின்ன் என்ற வரலாறு இதில் அடங்கியது. இப்பொழுது நடக்கிற ச்வேத வராஹ கல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளய ஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலே யெடுக்க நினைத்து ஸ்ரீவரஹாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்துவந்தன்னென்ற வரலாறும் உண்டு. அதுவும் இங்கு அது ஸந்திக்கப்பட்டதாகலாம். ஏழுலகு என்றவிடத்துள்ள ஏழ் என்னுஞ் சொல் ஏழான எண்ணைக் குறிக்காமல் “ஸகலமான“ என்னும் பொருளைக் குறிக்கு மென்க. பூமண்டலம் முழுவதையும் என்றபடி. அன்றியே, ஸப்தத்வீபங் (ஏழு தீவு) களையுடைய பூமண்டலம் என்னவுமாம். அவையாவன – நாவலந்தீவு, இறலித்தீவு, குசையின்தீவு, கிரவுஞ்சதீவு, சான்மலித்தீவு, தெங்கின்தீவு, புட்கரத்தீவு என ஏழாம். கூறிய அறுசுவைப் பயனுமாயின – உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு என அறுசுவாயாம். இவை நிரம்பிய உணவு போலே பரமபோக்யன் எம்பெருமான் என்றவாறு. “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணன்“ என்று கொண்டிருப்பார்க்கு அநுபவ விஷயமாம் இது. “அச்சுவைக் கட்டி யென்கோ அறுசுவையடிசிலென்கோ“ என்றார் நம்மாழ்வாரும்.வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்திக்குத் தகுதியாகப் புரி செய் என்ற பாடம் கொள்ளத்தக்கது, புரி என்ற வடசொல் நகரமெனப் பொருள்படும், கற்போர்களுடைய (வித்வான்களுடைய புரியாகச் செய்யப்பட்ட தென்க. மற்றொரு சிறிய வியாக்கியானத்திலே “தொழில் ஓரப்படா நின்றுள்ள மதிள்களையு முடையதாய்“ என்ற ஸ்ரீஸூக்திக்குத் தகுதியாக புரிசை என்ற பாடம் கொள்ளத்தக்கது. “கற்பு ஓர் புரிசை“ என்று பிரித்து, நல்ல வேலைப்பாடுகளையுடைய திருமதில்களை யுடைத்தான என்று கொள்க. புரிசை என்ற ஒரு பாடத்திலேயே இரண்டு வகைப் பொருள்களையும் பொருந்தவிடலாமென்பாரு முளர் நிற்க. கனக மாளிகைகளினின்றும் நிமிர்ந்த கொடியானது விசும்பி விளம்பிறையைத் துவக்குமென்ற அதிசயோக்தியினால் அவ்விடத்துத் திருமாளிகைகளின் ஓக்கம் தெரிவிக்கப்பட்டதாகும். ஆடு அரவு – எம்பெருமான் எப்போதும் தன்னோடு அணைந்திருக்கப் பெற்றதனால் மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் படமெடுத்தாடுவன் திருவனந்தாழ்வான். அமளி – படுகை. அறிதுயில் –ஜாகரணத்தோடு கூடிய நித்ரை, அதாவது யோக நித்ரை* உறங்குவான்போல் யோகு செய்யும் பெருமானிறே.