2 எண்ணிக்கை பாடல் பாட

வையம் தகளியா*  வார்கடலே நெய்யாக,*  
வெய்ய கதிரோன் விளக்காக,* - செய்ய-
சுடராழி யான்அடிக்கே*  சூட்டினென்சொல் மாலை,* 
இடராழி நீங்குகவே என்று  (2)

சென்றால் குடைஆம்*  இருந்தால் சிங்காசனம்ஆம்,* 
நின்றால் மரவடிஆம் நீள்கடலுள்,* - என்றும்-
புணைஆம் மணிவிளக்குஆம்*  பூம்பட்டுஆம் புல்கும்- 
அணைஆம்,*  திருமாற்கு அரவு.  (2)

உளன்கண்டாய் நல்நெஞ்சே!*  உத்தமன் என்றும்-
உளன்கண்டாய்,*  உள்ளுவார் உள்ளத்து- உளன்கண்டாய்,*
வெள்ளத்தின் உள்ளானும்*  வேங்கடத்து மேயானும்,* 
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்  (2)

ஓர்அடியும் சாடுஉதைத்த*  ஒண்மலர்ச் சேவடியும்,* 
ஈர்அடியும் காணலாம் என்நெஞ்சே!* - ஓர்அடியில்-
தாயவனை கேசவனை*  தண்துழாய் மாலைசேர்,*
மாயவனையே மனத்து வை (2)