2 எண்ணிக்கை பாடல் பாட
அன்பே தகளியா* ஆர்வமே நெய் ஆக,*
இன்பு உருகு சிந்தை இடு திரியா,* நன்பு உருகி*
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்* நாரணற்கு*
ஞானத் தமிழ் புரிந்த நான். (2)
அத்தியூரான்* புள்ளை ஊர்வான்,* அணி மணியின்-
துத்தி சேர்* நாகத்தின்மேல் துயில்வான்,* - முத்தீ-
மறை ஆவான்* மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்*
இறை ஆவான் எங்கள் பிரான். (2)
இறை எம் பெருமான் அருள் என்று* இமையோர்-
முறை நின்று* மொய்ம் மலர்கள் தூவ,* - அறை கழல-
சேவடியான்* செங்கண் நெடியான்,* குறள் உருவாய்-
மாவடிவின்* மண் கொண்டான் மால். (2)