விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற*  அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்* 
  விளங்கு சுடர் ஆழி*  விண்ணோர் பெருமான் நண்ணார்முன்* 
  கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்*  கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்*
  தடம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அடுத்து ஆர்த்து எழுந்தாள் - மேல் விழுந்து வந்துகிட்டி ஆரவாரஞ்செய்து கிளர்ந்தவளான சூர்ப்பணகை.
பிலம் வாய் விட்டு அலற - பிலம்போன்ற வாயைத்திறந்து கொண்டு கதறும்படியாக
அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் - அவளுடைய மூக்கை கூர்மையான வாளாலே (இளையவனைக் கொண்டு) அறுத்தவனும்
விளங்கு சுடர் ஆழி - பிரகாசிக்கின்ற ஒளியையுடைய திருவாழியையுடையவனும்
விண்னோர் பெருமான் - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்

விளக்க உரை

English Translation

The Lord of discus is the Lord of the celestials. When the demoness approached him with lewdness, he cut off her nose and sent her howling through her gaping mouth. When the dark clouds gathered with thunder, He lifted the Govardhana mount and stopped the rains to SAVE the cows, putting his detractors to shame. He resides amid beautiful lakes. Go to Him in Saligrama, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்