விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து*  ஒரு மறத் தொழில் புரிந்து* 
    பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த*  பனி முகில் வண்ணன் எம் பெருமான்
    காரணம் தன்னால் கடும் புனல் கயத்த*  கரு வரை பிளவு எழக் குத்தி* 
    வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேர் அணங்கு அல்குல் - தேர்போன்று அழகிய நிதம்பத்தை யுடையளும்
செழுகயல் கண்ணி திறத்து - அழகிய கயல்போன்ற கண்களையுடையளுமான நப்பின்னைக்காக
ஒரு மறத்தொழில் புரிந்து - கோபம் மிக்க செயலைச்செய்து
பார் அணங்குஇமில் - பூமியிலுள்ளாரெல்லாரும் நடுங்கும்படியான முசுப்பையுடைய
ஏறு ஏழும் முன் அடர்த்த - ஏழு எருதுகளையும் கண்முன்னே வலியடக்கின

விளக்க உரை

English Translation

For the sake of thin-waisted fish-eyed Nappinnai dame, the Lord of cloud hue, my master, battled angrily and subdued the seven mighty dust-raising bulls. By the penance of Bhagiratha, the river flows splitting dark mountain rocks and pushing elephants; down the slopes on the banks of the Ganga, He resides in Vadari-Ashrama.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்