விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே!*  தொழுது எழு தொண்டர்கள் தமக்குப்* 
    பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்*  பேர் அருளாளன் எம் பெருமான்* 
    அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்*  ஆரமும் வாரி வந்து*
    அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆரமும் - ஹாரங்களையும்
வாரி வந்து - திரட்டிக்கொண்டுவந்தும்
மணி கொழித்து - ரத்னங்களைத் தள்ளிக்கொண்டு வந்தும்
இழிந்த - ப்ரவஹிக்கப்பெற்ற
கங்கையின் - கங்காநதியினுடைய

விளக்க உரை

மனமே! உனக்கு உறுதியாக ஒன்றைச் சொல்கிறேன் கேள்! வணங்கி வாழ்ந்து போ!
யாரை வணங்குவது என்று கேட்டால் சொல்கிறேன்! தொண்டு செய்பவர்களுக்கு எல்லாவிதமான நோய்களையும் ஒழித்து, மரணமில்லாத தேவர்களின் (நித்யர்களின்) நிலையான பெரிய பரமபதத்தை அருளும் பேரருளாளனான எம்பெருமான் அழகிய மலர்களைச் சூடிய கூந்தலை உடையவர்களான தேவ மகளிர்கள் நீராடும் போது, அவர்களின் மெல்லிய உடைகளையும் (துகிலையும்) கழுத்தில் அணியும் நகைகளையும் வாரிக்கொண்டு வந்து பொன்னும் மணியுமாகப் பொங்கி வரும் கங்கையின் கரை மேல் பத்ரிகாச்ரமத்தில் நிலையாக வாழ்கின்றான்! அவனைத் தொழுது எழு!

English Translation

Let me tell you, O Heart! Arise and worship the benevolent Lord my master, who dispels the pall of devotees and grants the rule of the wide sky of eternals. On the banks of the Ganga, where the pure waters wash gems from the ornaments worn by the fragrant coiffured celestial Rambha, --He resides in Vadari-Ashrama.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்