விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செங்கமலப் பூவிற்*  தேன் உண்ணும் வண்டே போல்* 
    பங்கிகள் வந்து*  உன் பவளவாய் மொய்ப்ப*
    சங்கு வில் வாள் தண்டு*  சக்கரம் ஏந்திய* 
    அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ* 
     ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொன் இயல் - பொன்னாற்செய்த;
கிண்கிணி - அரைச்சதங்கை பாதச் சதங்கைகளையும்;
சுட்டி - சுட்டியையும்;
புறம் - (அதற்கு உரிய) இடங்களிலே;
கட்டி - அணிந்து;

விளக்க உரை

உரை:1

மிகவும் ஒளிவீசுகின்ற ஆபரணங்களை அணிந்து கொண்டுள்ள கண்ணன் ஓடிவருவது - மின்னலைக் கொண்டுள்ள மேகம் விரைந்து ஓடிவருவதை ஒக்கும். உபமேயத்தில் சலன்சலனென்றிட என்றதனால் உபமானத்தில் சிறிய இடிகளிடித்தலைக் கொள்க. குழந்தைகள் தாய்மாரிடுப்பில் ஏறுவதற்காக ஓடிவந்து அத்தாய்மார்களைத் தழுவி அணைத்துக் கொள்ளும் இயல்பைப் பிரார்த்திக்கிறபடி. அச்சோ என்பது முற்காலத்திலே குழந்தையை அணைத்துக்கொள் என்று வேண்டுதற்கு ஏற்ற குறிப்புச்சொல்லாக விருந்ததெனக் கொள்ளத்தகும். இனி அச்சோ என்பது அதிசயத்தைக் குறிப்பதோரிடைச் சொல்லெனக்கொண்டு கண்ணன் தன்னை அணைத்துக் கொள்ளுதலை நன்கும்போது தோன்றும் பரமாநந்தத்தில் மூழ்கி நெஞ்சுருகிச் சொல்லிடிந்து வாய்விட்டுச் சொல்லமாட்டாமல் அவ்வாச்சர்யத்தை ஒரு தரத்துக்கிருதரம் அச்சோ அச்சோ என்கிறாள் என்னவுமாம். எனவே இது இங்கு அணைத்துக்கொள் என்ற பொருளை ஸந்தர்ப்பத்தால் குறிப்பிக்கின்றதென்று ஒட்டம் + தார = ஒட்டார விகாரப்புணர்ச்சி. ஒட்டரா வாரா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்.

உரை:2

எம்பெருமானே! செந்தாமரை மலரில் தேன் உண்ணும் வண்டுகளைப் போல், உன் செவ்விதழ் மேல் கருங்கூந்தல் படர ஓடி வந்து, திருச்சங்கு, வில், வாள், தண்டு, திருச்சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களை ஏந்திய உள்ளங்கைகளாலே என் ஆன்மாவின் பாவங்களை கழுவுமாறு என்னை ஆரத்தழுவுவாயாக!

 

English Translation

With golden ankle bells and a forehead pendant in their places sounding ‘clang clang’ , is he going to come running to my waist confronting me like a swift lightning cloud? My Lord, come quickly, Acho, Acho!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்