விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய*  அஞ்சனவண்ணன் தன்னைத்* 
  தாயர் மகிழ ஒன்னார் தளரத்*   தளர்நடை நடந்ததனை*   
  வேயர் புகழ் விட்டுசித்தன்*  சீரால் விரித்தன உரைக்கவல்லார்* 
  மாயன் மணிவண்ணன் தாள் பணியும்*  மக்களைப் பெறுவர்களே* (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆயர் குலத்தினில் வந்து - இடையர் குலத்திலே வந்து
தோன்றிய - அவதரித்த
அஞ்சனம் வண்ணன் - மை போன்ற கருநிறமுடையனான கண்ணன்
தன்னை - தன்னை (க்கண்டு)
தாயர் - தாய்மார்கள்

விளக்க உரை

மேன்மை மிகுந்த ஆயர் குலத்தில் வந்து வளர்ந்த கரியமை வண்ணனை, 
தாயர் மகிழ, ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததை~ ஆயர்குடியில் உள்ள அத்தனைப் பெண்களுக்கும், கண்ணன் அவர்கள் வீட்டுப்பிள்ளை. தாய்மார்கள் மனம் பெருமகிழ்ச்சி அடையவும், பகைவர்கள் அஞ்சி நடுங்கும் வண்ணம் தளர்நடை நடந்த அழகினை அந்தணக்குடியில் பிறந்த, புகழ்மிகுந்த விட்டுசித்தன் என்னும் திருநாமமுடைய பெரியாழ்வார் அவர்கள் பெருமையுடன் சொல்லிய இந்த பாடல்களை மனமுவந்த கூறுபவர்கள் கரியமாலவன், மணிவண்ணனின் திருத்தாளினை வணங்கக்கூடிய மக்களைப் பெறுவார்கள். 

English Translation

These songs by famed Vishnuchitta of Veyar-clan sing of the dark hued Lord who took birth in the cowherd clan when he toddled, giving pleasure to his mothers and fear to his foes. Those who master it will beget children who are devoted to the feet the wonder-Lord of gem-hue.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்