விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குலம் தரும் செல்வம் தந்திடும்*  அடியார் படு துயர் ஆயின எல்லாம்* 
    நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*  அருளொடு பெரு நிலம் அளிக்கும்* 
    வலம் தரும் மற்றும் தந்திடும்*  பெற்ற தாயினும் ஆயின செய்யும்* 
    நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாராயணா என்னும் நாமம் - நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்கட்கு)
குலம் தரும் - உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்;
செல்வம் தந்திடும் - ஐச்வரியத்தை அளிக்கும்;
அடியார் படு துயர்ஆயினஎல்லாம் - அடியவர்கள் அனுபவிக்கிறதுக்கமென்று பேர்பெற்றவையெல்லாவற்றையும்
நிலம் தரம் செய்யும் - தரை மட்டமாக்கிவிடும்

விளக்க உரை

"( கல்கி இதழில் திருமங்கையாழ்வார் பற்றி முன்பு ஒருமுறை சுஜாதா எழுதிய கட்டுரை )  வைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது? அதைமட்டும் தெரிந்து கொண்டால் திவ்யப் ப்ரபந்தத்தையே தெரிந்துகொண்ட மாதிரி. அப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா என்ற இந்த அவசர உலகத்தில் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் திருமங்கையாழ்வாரின் இந்தப் ¢பாசுரத்தை பரிந்துரைப்பேன்.
என் தந்தை, 'இந்தப் பாசுரம் ஒன்றே போதும். திவ்யப் ப்ரபந்தத்தின் சாரம், திருமந்த்ரார்த்தம் இதுதான்' என்பார். இறக்கும் தருவாயில் இந்த ஒரு ¢பாசுரத்தை காதில் சொன்னால் போதும் என்று கூடச் சொல்வார்கள். திருமங்கையாழ்வார் திவ்ய ப்ரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர். அதிகம் வைணவத் தலங்களுக்குச் சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார். அவர் பாடாத வைணவக் கோயில் இருந்தால் அது சமீபத்தியதாக இருக்கும்.நாராயணன் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. எளிமையானது - கடலில் சயனித்திருப்பவன்.நாரா - உலகத்தின் அத்தனை சேதன அசேதனப் பொருள்களையும் தன்னையும் சேர்த்து அயனன் இருப்பிடமானவன் திருமால் என்பதே இதன் ஆழமான பொருள்.அந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார்".

English Translation

It gives a good life, of wealth and family, and rages to ground all travails, facing devotees, then grants the rule of the Sky and Earth with benign grace. It gives a man strength, and all that there is, with love that exceeds a mother’s. It gives the pure good, I know the Mantra, Narayana is the good name.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்