விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்*  செங்கண்மால் கேசவன்*  தன்- 
    திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி*  திகழ்ந்து எங்கும் புடைபெயர* 
    பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்*  பெரியதோர் தீர்த்த பலம்- 
    தரு நீர்ச்*  சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்*  தளர்நடை நடவானோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் கண் மால் - சிவந்த கண்களையும் கருநிறத்தையுமுடைய
கேசவன் - கேசவனென்னுந் திருநாமமுடைய இவன்,
திரை நீர் - அலைகின்ற நீரையுடைய ஸமுத்திரத்தின் நடுவில்
சந்திரன் மண்டலம் போல் - ப்ரதிபிம்ப சந்த்ர மண்டலத்தைப்போல
தன் – தன்னுடைய

விளக்க உரை

அலைகடல்நீரில் தெரியும் உதயசந்திரனைப் போல, செந்தாமரை இதழ்களைப் போன்று சிவந்த நிறமுடைய கண்களை உடைய திருமால், கேசவன் தன்னுடைய திரு நீர் முகத்தில் துலங்கும் சுட்டியானது, திகழ்ந்து எங்கும் புடை பெயர;பெருநீர்த் திரை எழுக்கூடிய கங்கையின் தீர்த்தம் தரக்கூடியதைக்காட்டிலும் மிகப்பெரும் புண்ணியம் தரக்கூடியதான நீர்... எந்த நீர்?பெரிய, பெரிய அலைகள் எழக்கூடிய கங்கை நீரைக்காட்டிலும், மாபெரும் புண்ணியம் தரக்கூடிய நீரினைகுழந்தைக்கண்ணனின் சிறு ஆண்குறியினின்று வெளியேறும் நீரானது சிறுசிறு துளிகளாகச் சிந்தத் தளர்நடை நடவானோ 

English Translation

The ornament on lotus-eyed kesava’s forehead sways flashing like a full moon reflected on dark waters. Holier then the hushing water of the great river Ganga is the piss that flows from his little penis. With droplets dripping, is he going to come toddling now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்