- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானது அருளைக்காட்டிலும் ஆழ்வாரருளே சீரியதென்கிறார். “கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமுஞ் சொற்பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினாலருள் செய்தான்” என்றபடி ஸகல வேதவேதாங்க நூல்களையும் ப்ரஸாதித்தருளின எம்பெருமானுடைய க்ருபைக்கு மேற்பட்ட உலகில் வேறொரு க்ருபையுண்டோ? என்று அந்த பகவத் க்ருபையிலேயே ஈடுபட்டிருந்த பாகவதர்கள், ஆழ்வார் திருவாய்மொழி அருளிச் செய்த பின்னர்‘ஹா! ஹா!! இவ்வளவு இனிமையான திவ்யப்ரபந்தம் போன்ற ஒரு நூலையும் இதுவரை ஈச்வரன் நமக்கு உபகரிக்கவில்லை; இன்றளவும் ஈச்வரனுக்கு மேற்பட்ட க்ருபாளு யாருமில்லையென்று நாம் மயங்கிக் கிடந்தோம், *பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரத்தை அருளிச்செய்த ஆழ்வாருடைய திருவருளுக்கு நிகரான அருளும் இனி உலகிலுண்டோ? என்று வியந்து மகிழ்ந்தனராம்; அதனை யருளிச்செய்கிறார்- இங்கு முதலடியில்.
English Translation
For those who worship grace alone, by grace he sang the thousand songs. A bigger grace you cannot show, for he did grace the Vedas-four.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்