விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண்டு கொண்டு என்னைக்*  காரிமாறப் பிரான் *
  பண்டை வல் வினை*  பாற்றி அருளினான்*
  எண் திசையும்*  அறிய இயம்புகேன்* 
  ஒண் தமிழ்ச்*  சடகோபன் அருளையே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிரான் - பரமோபகாரகராய்;
காரி மாறன் -  பொற்காரியார் திருக்குமாரரான நம்மாழ்வார்;
எண் திசையும் - எட்டுத் திக்கில் உள்ளவர்களும்;
பாண்டை வல் வினை - அநாதியாய்ப் பிரபலமாயிருந்த பாவங்களை;
இயம்புகேன் - சொல்லக்கடவேன்;
 

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “நன்புகழேத்தவருளினான்” என்றவிடத்துக் கூறிய புகழேத்துகையாவது இதுதான் என்று இப்பாட்டில் வெளியிடுகிறார்: ஆழ்வார் திருவாய்மொழி பாடவல்லவர், எம்பெருமானையும் வசப்படுத்தவல்லவர் இத்யாதியாகவுள்ள அவருடைய புகழ்களை நான் ஏத்துகிறவனல்லன்; பாவங்கள் கூடுபூரித்துக்கிடந்த அடியேனைப் பரமபரிசுத்தனாக்கி ஆட்கொண்ட பெருமையாதொன்றுண்டு. இதற்குமேல் வேறொருபெருமை ஆழ்வார்க்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை; அந்தப் பெருமையையே நாடெங்குமறியப் பறையடிக்கின்றேன் என்கிறார்.

English Translation

My Kari-Maran took a note of Karmas of my older days. I shall let the Quarters know, Satakopan-the-Tamil’s grace.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்