விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்*
  நின்று தன் புகழ் ஏத்த அருளினான் *
  குன்ற மாடத்* திருக் குருகூர் நம்பி *
  என்றும் என்னை * இகழ்வு இலன் காண்மினே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஏத்த - துதிக்கும்படி;
எழுமையும் - மேலுள்ள காலமெல்லாம்;
திருகுருகூர் நம்பி - திருநகரிக்குத் தலைவரான அவ்வாழ்வார்;
குன்றம் மாடம் - மலைபோன்ற மாடங்களையுடைய;
காண்மின்  - (இதனை அநுபவத்தில்) கண்டுகொள்ளுங்கள்;

விளக்க உரை

“சதிர்த்தேனின்றே” என்று பரமாநந்தமாக அருளிச்செய்த மதுரகவிகளை நோக்கி ‘நீர் சதிர்த்தபடி என்?’ என்று கேட்க, இன்றுமுதலாக இனி மேலுள்ள காலமெல்லாம் ஆழ்வாருடைய திவ்யகுணங்களையே நான் பாடித் திரியும்படி அவ்வாழ்வாரால் க்ருபை பண்ணப்பெற்றேன்; இவ்வளவேயுமின்றி, ஒருகால் நான் ஆழ்வாரை இகழ்ந்தாலும் அவர் என்னை இகழமாட்டாரென்னும்படி அவ்வளவு பரமகிருபைக்குப் பாத்திரமாயினேனே! இதற்கு மேற்பட்ட சதிர் உலகத்திலுண்டோ? என்கிறார்.

English Translation

The Kurugur mansioned city’s king has made me sing his praise by rote. Henceforth through seven lives, He shall never fail me, note!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்