விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நம்பினேன்*  பிறர் நன்பொருள் தன்னையும்*
  நம்பினேன்*  மடவாரையும் முன் எலாம்*
  செம்பொன் மாடத்*  திருக் குருகூர் நம்பிக்கு
  அன்பனாய்*  அடியேன்*  சதிர்த்தேன் இன்றே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அடியேன் - (இன்று ‘அடியேன்’ என்று சொல்லும்படி திருந்தின) நான்;
பிறர்  - அயலாருடைய;
நம்பினேன் - ஆசைப்பட்டுக் கிடந்தேன்;
சதிர்த்தேன் - சதிரையுடையேனானேன் (சமத்தனாய்விட்டேன்.);
திரு குருகூர் - நம்பிக்கு திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்கு;
 

விளக்க உரை

முதலடிக்கு- அயலாருடைய பொருள்களைக் களவுசெய்தேன் என்று ஸாமாந்யமாகப் பொருளாயினும் நன்பொருள் என்ற ஸ்வாரஸ்யத்தால் இங்கு ஆத்மாபஹாரம் பொருளாகக்கடவது. ஈச்வரனுக்கு மேஷபூதமான விலக்ஷண ஆத்மவஸ்துவை யென்னுடையதாக அபிமாநித்திருக்கையாகிற ஆத்மாபஹாரக்களவைச் செய்துபோந்தேன் என்கை. “***“-யோந்யதாஸந்தமாத்மாநம ந்யதா ப்ரதிபத்யதே! கிம்தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாபஹாரிணா’ என்றதை இங்கு அநுஸந்திக்க.

English Translation

The days I envied others’ pelf, and sought the love of lund dames! Now I have the Lord himself, who’s king of Kurugur city famed.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்