விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நன்மையால் மிக்க*  நான்மறையாளர்கள்*
    புன்மை ஆகக்*  கருதுவர் ஆதலில்*

    அன்னையாய் அத்தனாய்*  என்னை ஆண்டிடும்
    தன்மையான்*  சடகோபன் என் நம்பியே  

     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நால்மறை ஆளர்கள் - நான்கு வேதங்களிலும் வல்லவர்களான வைதிகர்கள்;
சடகோபன் - நம்மாழ்வார்;
என் நம்பி - எனக்குத் தலைவர்;
என்னை ஆண்டிடும் -  தன்மையான அடியேனைக் கைக்கொண்டருளு மியல்வினரான;
நன்மையால் மிக்க - நற்குணத்தால் மேன்மை பெற்றவர்களாய்;
 

விளக்க உரை

(நன்மையால் மிக்க) என்னை இகழ்ந்து கைவிட்டவர்கள் ஸாமாந்ய புருஷர்களல்ல; நன்மையால்மிக்க நான் மறையாளர்களாய்த்துக் கைவிட்டது; அதாவது- ஒருவனிடத்தில் சில குணங்களும் சில தோஷங்களுங்கிடந்தால் தோஷாம்ஸங்களைத் தள்ளிவிட்டுக் குணபாகங்களையே நோக்கிக் கைக்கொள்ளுதல், ஸ்வல்ப குணமுமில்லாமல் தோஷங்களே கூடு பூரித்துக்கிடந்தாலும் அக்குற்றங்களையே நற்றமாகக் கொண்டு கைக்கொள்ளுதலாகிற நன்மையிற் சிறந்தவர்களாய், இவ்வளவு ஆத்மகுணபூர்த்தி உண்டாவதற்கு ஈடாக நான்கு வேதங்களிலும் வ்யாஸபதம் செலுத்த வல்லவர்களான பெரியோர்களுக்கும் தமது நன்மையைக்கொண்டு என்னைக் கைக்கொள்ள முடியாதபடி மஹாபாபியாய்க் கிடந்தேனென்னு மிவ்வளவையே காரணமாகக்கொண்டு ஆழ்வார் கடாக்ஷித்தருளினார் என்கை. “நன்மையால்மிக்க நான்மறையாளர்” என்பதற்குப் பொருந்தியவர் கூரத்தாழ்வான் ஒருவரே என்று நம்முதலிகள் அனைவரும் ஒருமிடறாக அருளிச்செய்வர்களாம். கூரத்தாழ்வான் இகழ்ந்து கைவிடும்படியான ஜந்து உலகத்திலேயே கிடையாது; அப்படிப்பட்ட கூரத்தாழ்வானும் இம்மதுரகவிகளைக் கண்டால் விலக்கித் தள்ளும்படியாக அத்தனை ஹேயவஸ்துவாய்த் தாமிருந்ததாக நைச்யாநுஸந்தாநம் பண்ணிக்கொள்ளுகிறபடி.

English Translation

Worthy scholars full of grace has found me worthless in my ways. But Father, Mother both in one, Satakopan now rules my days.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்