விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்*  வேழத்தின் கருங்கன்று போல்* 
  தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்*  சிறு புகர்பட வியர்த்து* 
  ஒண் போது அலர்கமலச் சிறுக்கால்*  உறைத்து ஒன்றும் நோவாமே* 
  தண் போது கொண்ட தவிசின் மீதே*  தளர்நடை நடவானோ    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திரிவிக்கிரமன் - (தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி - வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு - மேலே போகட்டுக்கொண்டு
அளைந்தது - அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல் - ஒரு கரிய குட்டியானை போல,

விளக்க உரை

வெண்மையான, மணல் புழுதியினைத் தன் மேல் வாரி இறைத்துக் கொண்டு, அந்த மணலிலேயே உருண்டு, புரண்டு அனுபவித்து விளையாடி மகிழும், சிறிய யானைக்குட்டியினைப் போல  மூன்றடியில் உலகளந்த எம்பிரான், தெளிந்த புழுதியில், வியர்த்து விறு விறுக்க விளையாடி. நெடுநேரம் விளையாடினமையில், அவன் மேனியெங்கும் வியர்வைத் துளிகள் பூத்து சிறு சிறு அருவியினைப் போல் வழிகின்றனவாம். கதிரவன் உதயமாகிக் கீழ்வானம் வெளுத்து ஒளிரும் இளங்காலைப் பொழுது. அவ்வழகிய காலை வேளையில் தாமரைமொட்டுகள் அனைத்தும், மலரத் தயாராகி இருக்கின்றன. போது நிலையில் உள்ளன. சூரியனின் ஒரு கதிரின் ஒளியும் வெப்பமும் பட்டாலும் போதும், உடனே மலர்ந்து விடும். அத்தகைய நிலையிலுள்ள செந்தாமரை மலரின் போதுவினைப் போன்ற உன் அழகிய சின்னஞ்சிறு பாதங்களுக்கு, சிறு துரும்பு, கல், முள் போன்ற எத்தகைய ஒரு கடினமான பொருளினாலும் தீங்கு விளைந்திடாமல் இருக்கும் வண்ணம் அன்னச்சிறகினை ஒத்த மென்மையான மெத்தையில் குளிர்ந்த, முதிர்ந்த, போது நிலையிலுள்ள தண்மையான, மணம் மிகுந்த மலர்களை எங்கும் பரப்பி வைத்துள்ள இந்த தாழ்வான உயரமுடைய, பெரிய கட்டிலின் மேல் தளர் நடைநடவாயோ! 

English Translation

Like a baby elephant playing in white mud, Trivikrama playing in the dirt comes sweating in patches; lets he hurt his tender lotus feet when he steps on hard ground, may he come toddling on a bed of fresh blossoms.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்