- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
பெண்ணுலாம் சடையி னானும்* பிரமனு முன்னைக் காண்பான்,*
எண்ணிலா வூழி யூழி* தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*
விண்ணுளார் வியப்ப வந்து* ஆனைக்கன் றருளை யீந்த-
கண்ணறா,* உன்னை யென்னோ* களைகணாக் கருது மாறே!(2)
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்பாட்டுக்களில் கூறிய பாகவத வைபவம் நன்கு ஸம்விக்கக் கூடியதென்பதை ஸ்தாபிப்பதற்காக ஸ்ரீகஜேந்த்ராழ்வானுடைய சரிதத்தை அநுஸந்தித்துக் காட்டுகின்றார்; சிவன் பிரமன் முதலாயினோர் தாங்கள் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிக்கவேணுமென்று நெடுங்காலம் தவம்புரிந்தும் அவர்கட்கு அப்பேறு கிடையாமையாலே வெள்கிநிற்க்கும்படியாயிற்று; கஜேந்த்ராழ்வான் மநுஷ்யஜாதியுமல்ல; மிகவும் நீசமான திர்யக்ஜாதி.அப்படியிருந்தும் எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு எளிதில் பாத்திரமாய்விட்டது. ஆகையாலே ஜாதியின் சிறப்பு உபயோகமற்றது என்கிற அர்த்தம் இப்பாட்டில் அர்த்தாத் ஸூசிதம். வெள்கிநிற்ப-தங்களுடைய சிரமம் வீணாய் ஒழிந்தமையை நினைத்து வெட்கப்பட்டுத் தலைகுனிந்து தரையைக்கீறி நிற்கையில்என்கை. அன்றியே, வெள்கிநிற்ப-வெட்கப்பட்டு நிற்கும்படியாக என்றுமுரைக்கலாம். ஒரு தபஸ்ஸும் செய்யாத ஒரு யானைக்கு அருளையீந்த்து பிரமனுக்கும் சிவனுக்கும் லஜ்ஜாஹேதுவாக ஆமன்றோ.
English Translation
The Ganga mat-haired Siva and Brahma vie to see you. They perform penance, age after age, and stand disappointed. Surprising the gods above, you came with concern and showered your grace on an elephant. No wonder the world seeks you for benign protection.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்