விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பழுதிலா வொழுக லாற்றுப்*  பலசதுப் பேதி மார்கள்,*
  இழிகுலத் தவர்க ளேலும்*  எம்மடி யார்க ளாகில்,*

  தொழுமினீர் கொடுமின் கொள்மின்!*  என்றுநின் னோடு மொக்க,*
  வழிபட வருளி னாய்போன்ம்*  மதிள்திரு வரங்கத் தானே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

உத்பத்தியிலாவது ஆசாரம் முதலியவற்றிலாவது ஒருவகையாலும் குறையின்றியே ஸத்ஸந்தாந ப்ரஸூதர்களாய் ஸதாசார்நிஷ்டர்களா யிருக்கும் சதுர்வேதிகளை நோக்கி எம் பெருமான் கூறின வார்த்தை;- ‘ஓ சதுர்வேதிகளே’ உங்களைப்போலே, ப்ரஹ்மாதொடங்கி நெடுகிவருகிற வம்சப்ரவாஹத்திலே பிறந்து சதுர்வேதிகளா யிருப்பவர்கள் தாம் பூஜ்யர், மற்றையோர் அநாதரணீயர் என்று நீங்கள் பாவிக்கலாகாது; எந்த ஜாதியிலே பிறந்தவரேனும் எனது அடியவர்களானால் அவர்களை நீங்கள் தொழவேணும்; பரஸ்பரம் ஜ்ஞாநத்தைக் கொடுத்துக்கொள்ளலாம். விசேஷமாகச் சொல்வதேன்? என்னை நீங்கள் எவ்விதமாக ஆராதிக்க உடன்பட்டிருக்கிறீர்களோ, அவ்விதமாகவே அவர்களையும் ஆராதிக்க வேண்டியது தான்” என்று ஸ்ரீபாஞ்சராத்ரத்திலே “பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா” என்று தொடங்கி “தஸ்மைதேயம் ததோக்ராஹ்யம் ஸசபூஜ்யோ யதாஹ்யஹம்” என்பதீறாகவுள்ள ச்லோகங்களை நோக்குக.

English Translation

Faultless well-bred ones, well versed in the four Vedas, -- even if born in poor families, -- if they are your devotees, you treat them on par with yourself, worthy of worship, saying, “Revere them, give them, take to them.” O Lord of walled Arangama-nagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்