விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்* திருவரங்கங் கத்துள் ளோங்கும்,*
    ஒளியுளார் தாமே யன்றே* தந்தையும் தாயு மாவார்,*

    எளியதோ ரருளு மன்றே*  எந்திறத் தெம்பி ரானார்,*
    அளியன்நம் பையல் என்னார்*  அம்மவோ கொடிய வாறே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெளிவு இலா கலங்கல்  நீர் சூழ் - (ஒரு காலும்) தெளிவில்லாமல் கலக்கம் மாறாதிருக்கிற காவேரியாலே சூழப்பெற்ற;
திரு அரங்கத்துள் - கோயிலிலே;
ஓங்கும் - விஞ்சியிருக்கிற;
ஒளி உளார் தாமே அன்றே - தேஜஸ்ஸை உடையவரான அழகிய மணவாளனொருனேயன்றே;
தந்தையும் தாயும் ஆவார் - (நமக்குத்) தகப்பனும் தாயுமாயிருப்பர்;

விளக்க உரை

தாம் இப்படி கதறாநிற்கச் செய்தேயும் பெரியபெருமாள் இரங்கி அஞ்சேல்” என்னக் காணாமையாலே, தம்மையொழிய வேறே ஒரு சுற்றத்தவர் எனக்கு இருப்பதாக நினைத்திருக்கிறாரோ? ப்ரயோஜநாந்தரங்களை விரும்பி அகன்று போகிறேனென்று நினைத்திருக்கிறாரோ? ‘நம்முடையவன்’ என்று என்னைச் சிறிது அபிமாநித்தால் போதுமாயிருக்க இவ்வளவுகூட அபிமாநியாமல் கூக்குரல் கேட்டுக்கொண்டே கண்ணுறங்குவதே! அம்மே! இவர் திருவுள்ளம் இப்போது இங்ஙனே கொடிதாயிற்றே! என்று வருந்துகின்றார். காவேரிக்குத் தெளிவில்லாமை- மேன்மேலும் பெருக்கு மிக்கிருக்கையாலே. இத்தெளிவில்லாமையை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் ஒரு சமத்காரம் தோற்ற வருணிக்கிறார் - “துக்தாப்திர்ஜநகோ ஜந்ந்யஹமியம்” இத்யாதி ச்லோகத்தால் . அதன் கருத்து-பாற்கடல் தகப்பனார்; பொன்னி என்ற நான் தாய் ; ஸ்ரீரங்கநாய்ச்சியார் பெண்; பெரிய பெருமாள் மணவாளன்; இந்த விஷயத்திலே பெரிய பெருமாளுக்கும் பெரியபிராட்டியார்க்கும் தகுதியாக நான் என்ன பண்ணப்போகிறேன்? என்று கலங்கினாற்போல, சாமரம், கருப்பூரம், சந்தநவ்ருக்ஷங்கள், சிறந்த ரத்நங்கள், முத்துக்கள் முதலியவற்றை அலைகளாகிற கைகாலே உந்தா நின்று கொண்டு ஆழ்ந்து வருகிற காவேரியைப் பற்றுங்கள் என்பதாம்.

English Translation

The Lord of Tiru-Arangam in the midst of turbulent waters is the radiant Lord himself; he is the mother and father to all, with simplicity and grace. Alas, he does not look at me and say, “Aho, This is our ward, we must protect him”. O, the terrible ways!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்