விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாவியன் றுலக மெல்லாம்*  தலைவிளாக் கொண்ட எந்தாய்,*
    சேவியே னுன்னை யல்லால்*  சிக்கெனச் செங்கண் மாலே,*

    ஆவியே! அமுதே!* என்றன் ஆருயி ரனைய எந்தாய்,*
    பாவியே னுன்னை யல்லால்*  பாவியேன் பாவி யேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - அக்காலத்தில் (த்ரிவிக்ரமாவதாரத்தில்);
உலகம் எல்லாம் தாவி - எல்லா உலகங்களையும் கடந்து;
தலைவிளாக்கொண்ட எந்தாய் - (திருவடியினால்) வியாபரித்த எமது ஸ்வாமியே;
செங்கண்மாலே - சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே;
ஆவியே - (எனது உயிர்தரித்திருப்பதற்குக் காரணமான) பஞ்சப்ராணவாயுவானவனே;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் தமது கள்ளத்தன்மையைப் பேசி, “இப்படிப்பட்ட நாம் எம்பெருமானைக் கிட்டுதல் தகாது” என்று ஆழ்வார் அகல நினைக்க ஆழ்வீர்! நாம் உலகத்தாருடைய தாழ்வுகளைக் கண்ணெடுத்துப் பாராது அவர்களுடைய ஸ்வல்ப குணத்தையே பாராட்டி அவர்களை அடிமை கொள்பவரல்லோமோ? என்று தன்னுடைய வாத்ஸல்யம் விளங்குமாறு எல்லாரையும் தான் அடிமைகொண்ட த்ரிவிக்ரமாவதார சரித்திரத்தை இவர்க்கு நினைப்பூட்டிச் சமாதாநம் உண்டாகுமாறு செய்ய; அதனால் ஆழ்வார் தாம் முன்பு அவனைவிட்டு விலகிச்செல்லும்படி நினைந்த தமது குற்றத்தைப் பாராட்டி, “பாவியேன் பாவியேனே” என்று தம்மை வெறுத்துக்கூறி, எம்பெருமானைத் தவிர வேறொரு கடவுளை நினைத்தலும் தொழுதலும் செய்யாத தமது தன்மையை வெளியிடுகின்றனர்.

English Translation

O Lord my Senkamal! I worship none but you. Then you leapt over the heads of all the world. My soul, my Ambrosia, my Lord Sweet as my own life-breath! Other than you, I certainly have none, O Woeful, woeful me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்