விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உள்ளத்தே யுறையும் மாலை*  உள்ளுவா னுணர்வொன் றில்லா,*
  கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்*  தொண்டுக்கே கோலம் பூண்டேன்*<

  உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்*  உடனிருந் தறிதி யென்று,*
  வெள்கிப்போ யென்னுள் ளேநான்*  விலவறச் சிரித்திட் டேனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உள்ளத்தே உறையும் மாலை - நெஞ்சினுள்ளே வாஸஞ்செய்கிற எம்பெருமானாகிய உன்னை;
கள்ளத்தேன் நானும் - கள்ளனாகிய அடியேனும்;
தொண்டுஆய் - (உன்) அடிமையிலேயே அந்வயித்தவனாய்;
தொண்டுக்கே கோலம் பூண்டு - அவ்வடிமைக்கு உரிய வேஷங்களை அணிந்து;

விளக்க உரை

உரை:1

நாம் ஓரிடம்தேடி ஓடவேண்டாதபடி நம்ஹ்ருதயத்திலுள்ளே எப்போதும் வந்து நெருங்கியிருக்கிற உன்னைச் சிந்தைசெய்வதற்கு ஏற்ற அறிவுஇல்லாத ஆத்மாபஹாரக் கள்ளனாகிய அடியேன் உனக்கு அடிமைசெய்பவன்போலத் தோன்றி “இவன் பரமபாகவதன், பரமபக்தன்” என்று கண்டாரடங்கலும் புகழும்படியாக “தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றபடி கைங்கர்யவேஷங்களைப் போட்டுக்கொண்டு திரிந்தபோதிலும் “இன்னாரின்னார் இன்னது நினைக்கிறார்கள்” என்று எல்லாருடைய நினைவையும் நீ நெஞ்சினுள்ளேயே இருந்துகொண்டு அறிகின்றாயென்று உனது ஸர்வஜ்ஞத்வத்தை நான் அநுஸந்தித்தவாறே ‘ஐயோ! நமது கள்ளவேஷம் வெளிப்படையாயிற்றே!’ என்று வெட்கமடைந்து எனக்குள்ளேயே நான் சிரித்துக்கொண்டேனென்கிறார். -ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே” என்ற கருத்து ஈற்றடியில் உறையும். விலவறச் சிரித்திட்டேன் என்றது - எல்லை கடந்து சிரித்தமையைக் கூறியவாறு.

உரை:2

உள்ளத்தே உறையும் திருமாலை நினைக்கும் நினைப்பு சிறிதும் இல்லாத பொய்யனான நான் தொண்டு செய்கிறேன் என்று பொய்க்கோலம் பூண்டேன். நினைப்பவர் நினைப்பவை எல்லாம் உடன் இருந்து நீ அறிவாய் என்று வெட்கட்ப்பட்டு என்னுள்ளே நான் விலா அறும் படி சிரித்திட்டேனே.

English Translation

O Lord, You reside in every heart. You are witness to every thought that passes in every mind. I have no means to realize you. I am false, I pretend to serve you. I stand without shame and laugh till my ribs break.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்