- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
தவத்துளார் தம்மி லல்லேன்* தனம்படத் தாரி லல்லேன்,*
உவர்த்தநீர் போல* வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்,*
துவர்த்தசெவ் வாயி னார்க்கே* துவக்கறத் துரிச னானேன்,*
அவத்தமே பிறவி தந்தாய்* அரங்கமா நகரு ளானே!
காணொளி
பதவுரை
விளக்க உரை
தவமாவது - சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யும் காரியம்; முமுக்ஷுக்களாயிருப்பார் மோக்ஷார்த்தமாகத் தவம்புரிவர்கள்; புபுக்ஷுக்களாயிருப்பார் ஸ்வர்க்கம் முதலிய ப்ரயோஜ நாந்தரங்களைக் குறித்துத் தவம் புரிவார்கள்; நான் ஒருவிதமான தவமும் செய்திலேன். ஸத்விஷயத்திலே விநியோகப்படுகிற தனத்தை நான் படைக்கவில்லை என்கிறார் ‘தனம் படைத்தாரிலல்லேன்’ என்பதனால். “பொருள் கையுண்டாய்ச் சொல்லக்காணில் போற்றி யென்றேற்றெழுவர்” (திருவாய்மொழி - கூ- க-ங) என்றபடி கையில் நாலுகாசு நடமாடுமளவு கழிந்தால் பந்துக்களும் நோக்கமாட்டார்களென்ற கருத்துடன் இரண்டாமடி அருளிச்செய்கிறார். உவர்த்த நீர் போல உப்புத் தண்ணீரை முகத்திலே இறட்டிக்கொண்டால் கண்விழிக்க வொண்ணுதபடி கரிக்குமாபோலே ஏன்னை அவர்கள் நேர்முகம் பார்க்கமுடியாதபடி அவர்கட்கு நான் தீயனாய்விட்டேனென்கை.
English Translation
O Lord of Arangama-nagar! I am not among the wealthy ones. To my friends and well wishers I am as useless as sea water. For the red-lipped dames, I have become wicked and unreliable. Alas, you have given me a useless life indeed!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்